(2634)
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்.
பதவுரை
|
பிரிந்து |
– |
தம்மைவிட்டுப் பிரிந்து |
|
ஒன்று நோக்காது |
– |
வேறொன்றிலும் கண் வையாமல் |
|
தம்முடைய பின்னே |
– |
தம்மோடு கூடவே |
|
திரிந்து உழலும் |
– |
அலைந்துகொண்டு திரிகிற |
|
சிந்தனையார் தம்மை |
– |
என் நெஞ்சினாரை |
|
ஒரு கால் |
– |
ஒரு நாலாகிலும் |
|
புரிந்து |
– |
அன்புகூர்ந்து |
|
ஆ ஆ என இரங்கார் |
– |
ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்); |
|
அந்தோ |
– |
கஷ்டம்!; |
|
மா வாய் பிளந்தார் மனம் |
– |
கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு |
|
வலிதே கொல் |
– |
கடினமோ; |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பிரிந்தொன்று நோக்காது.) எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்டபோதெல்லாம் தாம் பாவநாப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில். அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே (அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்) இருக்குமேயன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்கமாட்டாவே; “ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப்பெற்றோமென்று களித்திருந்தோமே; இப்படி அந்யதாஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி, ‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப்படுத்தி வருகிறானே யொழிய ஒருகாலும் அவள் திருவுள்ளத்தில் இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல்நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார்.
ஆவாவென = ‘ஹா ஹா’ என்கிற வடமொழி அவ்யயம் ஆவாயென்று கிடக்கிறது. இரக்கக் குறிப்பிடைச்சொல்.
மாவாய் பிளந்தவரலாறு :- கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் கேசியெனபவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கெண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவால் வகிர்ந்து தள்ளினள் என்பதாம்.
ஆச்ரிதர்கட்காகக் கேசிவதம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்து பாமகாருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன் என் விஷயத்திலே கல்நெஞ்சனாவதே! என்று வெறுக்கிறார்.
“உயர்வற வுயர்நலமுடையவன்” என்று ஸமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாகத் தம் வாயாலே சொல்லத்தக்க எம்பெருமானை ‘இரக்கமற்றவன்’ என்று உறுதியாகச் சொல்லக்கூசி, “அந்தோ! வலிதே கொல்?” என்று சங்கிப்பது போலக் கூறினபடி.
English Translation
Not once does the Lord take pity on his devotees, -who sacrifice everything and run after him heedless of any other thought, -and inquire, “Oh, Oh!”, Alas, does the Lord who ripped the horse’s jaws have such a hard heart?
