(2467)

(2467)

உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்

உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய்

தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,

என்னொப்பார்க் கீச னிமை.

 

பதவுரை

நல் நெஞ்சை

எனக்குப் பாங்கான மனமே!

உத்தமன்

புருஷோத்தமனான எம்பெருமான்

உளன் கண்டாய்

(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்

தன் ஒப்பான்

(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்

தமியேற்கு

ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்

என்றும் உளன் கண்டாய்

எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.

உள்ளுவார் உள்ளத்து

ஆஸ்திகர்களுடைய மனத்திலே

உளன் கண்டாய்

நித்யவாஸம் பண்ணுமவன் காண்

என் ஒப்பார்க்கு

என்னைப்போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்

தான் ஈசன் ஆய் உளன் காண்

தானே நிர்வாஷகனாயிருக்கிறான் காண்

இமை

இதனை அறி.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் தம்முடைய ஆஸ்திகத்வத்தின் உறைப்பை நன்கு வெளியிடும் பாசுரம் இது.

தன் ஒப்பான் – ‘***‘ என்ற கருதியின்படி ஒத்தாரும் மிக்காருமிலனாதலால் தனக்குத்தானே ஒப்பாமவன். இங்ஙனங் கூறுதலே அநந்வயாலங்காரமென்பர். தமியேற்கு – தமியன் என்றால் தனிப்பட்டவன் என்று பொருள். அகிஞ்சநனான எனக்கு என்கை. ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்‘ என்கிறபடியே ஒரு கைம்முதலுமில்லாதவர்க்கு எல்லாக் கைம்முதலும் எம்பெருமான்தானேயா யிருப்பனென்க. என்னொப்பார்க்கு – மற்றுள்ள ஆழ்வார்களையுங் கூட்டிக்கொள்ளுகிறபடி.

 

English Translation

See, O Heart! The supreme Lord exists. Always he exists. In the hearts of devotees, he exists, The Lord without a peer appears before devotees like me on his own know it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top