(2451)

(2451)

தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,

ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் – யானொருவன்

இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்

சென்றாங் கடிப்படுத்த சேய்.

 

பதவுரை

தான் ஒருவன் ஆகி

(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து

சென்று

(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று

ஆங்கு

அந்த மாவலியின் யாக பூமியிலே

இரு நிலத்தை

விசாலமான இந்நிலத்தை

அடிப்படுத்த

திருவடியினளவாக ஆக்கிக் டிகாண்ட (அளந்து கொண்ட)

சேய்

சிறுபிள்ளையானவன்

ஏன் ஒருவன் ஆய்

விலக்ஷண வராஹ ரூபியாய்

தரணி

பூமியை

இடந்து அடுத்து

(அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து

எயிற்றில்

(தனது) கோரைப் பல்லின்மீது

தாங்கியது

தரித்தமையை

யான் ஒருவன்

நானொருவன் மாத்திரம்

இன்றா

இன்றாக

அறிகின்றேன் அல்லேன்

அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் வாமநமூர்த்தியாகி மாவலிபக்கலிற் சென்று மூவடியிரந்துபெற்று மூவுலகளந்ததும், பிரளயப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அண்டபித்தியில் ஒட்டிக்கிடந்த பூமியை மஹாவராஹ மூர்த்தியாகி உத்தரித்தும் ஆகிய இப்படிப்பட்ட பெருமைகள் ஸர்வலோக ப்ரஸித்தமென்கிறார்.

“தானொருவனாகி“ என்பதை மேல் மூன்றாமடியோடு கூட்டியுரைக்க. ‘தானொருவனாகி இருநிலத்தைச் சென்றாங்கடிப்படுத்த சேய் ஏனொருவனாய்த் தரணி இடந்தெடுத்து எயிற்றில் தாங்கியதும் யானொருவன் இன்றாவறிகின்றேனல்லேன்‘ என இயையும்.

‘யானொருவ னறிகின்றேனல்லேன்‘ என்கையாலே உலக மெல்லாமறியும் என்பதும், ‘இன்றா வறிகின்றேனல்லேன்‘ என்கையாலே இது புராதநம் என்பதும் வெளியாம்.

 

English Translation

I am not the only one to realise the lord today, He came as a manikin child and took the Earth. He came as a boar and lifted the Earth on his tusk tooth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top