(2411)

(2411)

அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்

அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன

துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,

வெள்ளத் தரவணையின் மேல்.

பதவுரை

என்னை ஆளி

என்னை ஆட்கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்

ஸ்ரீரங்கநாதன்
என்னை

என்னை
அரங்கில்

ஸம்ஸாரமாகிற நாடகசாலையில்
எய்தாமல்

பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்

காத்தருள்வன்,
அவன்

அப்பெருமான்
என்னது

என்னுடைய
உள்ளத்து

நெஞ்சிலே
நின்றான் இருந்தான்

நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,

(ஆன பின்பு இனி)

அவன்

அப்பெருமான்
வெள்ளத்து

திருப்பாற்கடலில்
அரவு

அப்பெருமான்
வெள்ளத்து

திருப்பாற்கடலில்
அரவு அணையின் மேல்

சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே

பொருந்துவனோ?

(பொருந்தமாட்டான்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படிப்பட்ட எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய ஸ்தாநங்களை விட்டிட்டு என்னெஞ்சிலேயே நிற்பதுமிருப்பதுமாகா நின்றான் என்கிறார். திருவரங்கம் பெரியகோயிலில், குடதிசை முடிவைத்துக் குணதிசை பாதம்நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கித் துயில்கொள்ளுமழகைக்காட்டி என்னை ஆட்படுத்திக்கொண்ட பெருமாள் இனி நான் ஸம்ஸாரமாகிய நாடகசாலையிற் புகாவண்ணம் என்னைக் காத்தருள்வன், அவ்வளவேயன்றி என்னுடைய ஹ்ருதயத்தையே தனக்குப் பரமப்ராப்யமான ஸ்தலமாகத் திருவுள்ளம்பற்றி, நிற்பதும் வீற்றிருப்பதுமெல்லாம் இங்கேயாயிராநின்றான், இனி அவனுக்குத் திருப்பாற்கடலில் திருவரவணையில்தானும் படுக்கை பொருந்துமோ? பொருந்தாது – என்றாயிற்று.

அரங்கில் – “***“ என்னும் வடசொல் கூத்தாடுமிடம் என்னும் பொருளது, அதுவே தமிழில் “அரங்கு“ எனத் திரிந்தது. நாடகசாலையில் ஒவ்வொருவனே பலபல வேஷங்களைப் பூண்டு கொணடு வருதல்பேல இந்த ஸம்ஸாரத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் பலபல தேஹங்களைப் பரிக்ர ஹித்துக்கொண்டு அனேக யோனிகளில் பிறப்பதுபற்றி ஸம்ஸாரத்தை நாடகசாலையாகச் சொல்வது நன்கு பொருந்தும். 1. பிறவி மா மாயக்கூத்து“ என்றார் நம்மாழ்வாரும்.

English Translation

He is my master. He ensures my safety form the snares of life.  He stand on my heart and he sits in my heart. So how can he prefer to life somewhere else in the deep-ocean?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top