(2311)

(2311)

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்

நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த

மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,

இறைபாடி யாய இவை.

 

பதவுரை

கடல்

திருப்பாற் கடலென்ன

குடந்தை

திருக்குடந்தை யென்ன

வேங்கடம்

திருமலையென்ன

நேர்ந்த என் சிந்தை

நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன

நிறை விசும்பும்

பரம்பின பரமபதமென்ன

வாய்ந்த மறை

அமைந்த வேதமென்ன

பாடகம்

திருப்பாடகமென்ன

அனந்தன்

ஆதிசேஸனென்ன

ஆய இவை

ஆசிய இவையெல்லாம்

வண் துழாய் கண்ணி

அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள

திருமால் சேர்ந்த

எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற

இறபாடி

ராஜதானிகளாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாசுரங்களில் அநுபவித்த திருக்குணங்களெல்லாம் குறைத்திலிட்ட விளக்குபோலே விளங்கப்பெற்ற இடங்களை எடுத்துப் பேசியனுபவிக்கிறார்.

திருக்குடந்தை திருவேங்கடம் முதலான திருப்பதிகளோடே கூடத் தம்முடைய சிந்தையும் சேர்த்துக் கணக்கிடுகையாலே, எம்பெருமானுக்கு இவர் தம் சிந்தையோடு மற்ற திருப்பதிகளோடு ஒரு வாசியில்லை என்றாராயிற்று. “வாய்ந்தமறை“ என்று வேதங்களையும் உடன் கூறினது – திருப்பதிகளில் ஸேவை ஸாதிப்பது போலத் தமக்கு வேதங்களிலும் ஸாக்ஷாத்தாக ஸேவைஸாதிக்கும்படியைத் தெரிவித்தவாறாம்.

இறைபாடி – ராஜதானி.

 

English Translation

That we too may see and enjoy him, he resides in venkatam, kudandai, Padakam, and in my heart.  He is the Lord of Sri. He reclines in the ocean on a serpent.  He is the lord of the vedas, the Lord of all in heaven, the Tulasi garland Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top