(2309)

(2309)

அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று

மிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும்

ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்

பேய்ச்சிபா லுண்ட பிரான்.

 

பதவுரை

வான் எயிறு

வான்போன்ற பற்களையுடையளான

பேய்ச்சி

பூதனையினுடைய

பால்

முலைப்பாலை

உண்ட

உண்டு அவளை முடித்தவனான

பிரான்

ஸ்வாமியானவன்

அடைந்தது

பள்ளிக்கொண்டது

அரவு அணை மேல்

சேஷசயனத்தின் மேலாம்

அன்று

முன்னொரு காலத்தில்

ஐவர்க்கு ஆய்

பஞ்சபாண்டவர்களுக்காக

மிடைந்தது

நெருங்க நடத்தினது

வெம் பாரதம் போர்

கடுமையான பாரதயுத்தமாம்,

உடைந்ததுவும்

அஞ்சி நின்றதும்

ஆய்ச்சிபால்

இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான

மத்துக்கே

மத்துக்காகவாம்,

அம்மனே

அந்தோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய சில சரித்திரங்களை போக்யமாகப் பேசியநுபவிக்கிறார். கிருஷ்ணாவதாரத்துக்கு முன்னே “ஏஷ நாராயண, ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந“ என்கிறபடியே திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருந்தான், பிறகு ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவ்வதரித்துப் பஞ்சபாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதப்போர் நடத்திவைத்தான், இவ்வளவு அபாரசக்தி வாய்ந்தவனாயிருக்கவும், “உழந்தாள் நறுநெய்யொரோ தடாவுண்ண, இழந்தாளெரிவினா லீர்ந்து எழில்மத்தின், பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்“ என்கிறபடியே யசோதைப்பிராட்டி மத்துகொண்டு அடிப்பதாகக் கைதூக்க, அசக்தரைப்போலே நடுநடுங்கிக் கிடந்தான், அப்படி அசக்தியை அபிநயிக்கும் பருவத்துக்கு முன்னமே முலையுண்கிற வியாஜத்தாலே பூதனை யென்னும் பேய்ச்சியின் உயிரை உறிஞ்சி முடித்தான். இங்ஙனே சக்தியையும் அசக்தியையும் மாறி மாறி வெளியிடுவது எத்திறம்! என்று உள்குழைந்தவாறு.

“ஆய்ச்சிபால்“ என்றவிடத்து, பால் – ஏழனுருபு. அம்மனே –ஆச்சரியக்குறிப்பிடைச்சொல்.

 

English Translation

Can the world understand this wonder? The Lord who reclines in the ocean-deep came as a wonder child and killed on ogress.  He conducted the great Bharata war and destroyed mighty kings.  And yet he cringed in fear when his mother threatened him with a churning rod for stealing butter!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top