(2305)

(2305)

வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,

நெருங்குதீ நீருருவு மானான், – பொருந்தும் சுடராழி

யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்

தொடராழி நெஞ்சே தொழுது.

 

பதவுரை

ஆழி நெஞ்சே

கம்பீரமான மனமே!

இரு நிலனும்

விசாலமான பூமியும்

மால் விசும்பும்

அளவிறந்த ஆகாசமும்

காற்றும்

வாயுவும்

நெருங்கு தீ

செறிந்த தேஜஸ்ஸும்

நீர் உருவும் ஆனான்

ஜலதத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்

பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான்

பொருந்திய ஒரு சுடர்ச்சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய

சூழ் கழலே

அடியாரை அகப்படுத்திக்கொள்ளுகிற திருவடிகளையே

வருங்கால் நாளும்

மேலுள்ள காலமெல்லாம்

தொழுது

வணங்கி

தொடர்

(அவனையே) பின்பற்றியிரு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருவடிகளிலேயே என் மனம் வியாமோஹங்கொண்டிருக்கின்றதென்றார் கீழ்பாட்டில், நெஞ்சே! உனக்கு அந்த வியாமோஹம் நித்தியமாய்ச் செல்லவேணும், என்று நெஞ்சை விளித்துக் கூறுகின்றார். முன்னடிகளில் ஜகத்காரணமான பஞ்ச பூதங்களைச் சொல்லியிருப்பது லீலாவிபூதியைச் சொன்னபடி, லீலாவிபூதி நிர்வாஹகன் என்கை. மூன்றாமடியில் சுடராழியை சொல்லியிருப்பது மற்றுமுள்ள நித்யஸூரிகளுக்கெல்லாம் உபலக்ஷணமாய் நித்ய விபூதி நிர்வாஹகன் என்றபடி. ஆக, உபய விபூதிநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே நெஞ்சமே! நாடோறும் தொழுது தொடர் என்றாராயிற்று.

சூழ் கழல் – சூழ்ந்துக்கொள்ளும் கழல், அதாவது –அடியார்களை அகப்படுத்திக்கொள்ளும் திருவடி என்கை.

 

English Translation

The adorable feet, – O Heart of mine!, -of the discus-wielding Lord will soon move into his primaeval state of Earth, sky, water, fire and air.  But following them with your worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top