(2258)
உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்,
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், – உறுங்கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞா றெப்பொழுதும்,
சாற்றி யுரைத்தல் தவம்.
பதவுரை
|
நல் நெஞ்சே |
– |
நல்ல மனமே! |
|
உத்தமன் |
– |
புருஷோத்தமனுடைய |
|
நல் பாதம் |
– |
சிறந்த திருவடிகள் |
|
உறும் கண்டாய் |
– |
நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை) |
|
ஓண் கமலம் தன்னால் |
– |
அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது) |
|
உறும் கண்டாய் |
– |
நமக்கு உரியது காண் |
|
சாத்தி |
– |
(அத்தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து |
|
ஏத்தி |
– |
துதித்து |
|
பணிந்து |
– |
நமஸ்கரித்து |
|
அவன் பேர் |
– |
அவனது ஸஹஸ்ர |
|
ஈர் ஐந்நூறு |
– |
நாமங்களையும் |
|
எப்பொழுதும் |
– |
அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற |
|
தவம் |
– |
தபஸ்ஸானது |
|
உறுமு கண்டாய் |
– |
உரியது காண். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் சொல்வதைக் கேட்டு அதன்படியே நடக்கும் நன்னெஞ்சமே! உனக்கு ஹிதமானவற்றைச் சொல்லுகின்றேன், கேளாய், யோக்யர் அயோக்யர் என்று வாசிபாராதே எல்லாரையும் ஆட்படுத்திக்கொள்ளுகையாகிற சிறந்த குணம் வாய்ந்த புருஷோத்தமனுடைய திருவடிகளே நமக்கு ப்ராப்தமென்று கொள், அன்னவனது அத்திருவடிகளைத் தாமரைமலர் முதலிய நன்மலர்களால் ஆராதிப்பது ஸ்வரூபப்ராப்தம் என்று கொள், அவனையே வாயாரத்துதித்துத் தலையாரவணங்கிப் பேராயிரமும் ஓதுவதே நமக்குத் தவம் என்று கொள் – என்றாராயிற்று.
English Translation
His feet will come of their own accord. Know if, O Heart! The lotus-dame Lakshmi’s grace too will accrue of its own accord. Even the penance of reciting his thousand names with worship and praise will accrue of its kown accord!
