(2252)
இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்
றடங்கா ரொடுங்குவித்த தாழி, – விடங்காலும்
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,
பூவா ரடிநிமிர்ந்த போது.
பதவுரை
|
விடம் காலும் |
– |
விஷத்தைக்கக்குகின் |
|
தீ வாய் |
– |
பயங்கரமான வாயையுடைய |
|
அரவு |
– |
திருவனத்தாழ்வானாகிய |
|
அணை மேல் |
– |
சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற) |
|
தோன்றல் |
– |
ஸர்வேச்வரன் |
|
வலம்புரி |
– |
சங்கானது |
|
இடங்கை |
– |
இடத்திருக்கையில் |
|
நின்று |
– |
இருந்து டிகாண்டு |
|
ஆர்ப்ப |
– |
முழங்க |
|
ஆழி |
– |
திருவாழியானது |
|
திசை |
– |
எல்லாவிட“களையும் |
|
அளப்பான் |
– |
அளந்து கொள்வதற்காக |
|
பூ ஆர் அடி |
– |
பூப்போன்ற திருவடியை |
|
நிமிர்த்த போது |
– |
உயரத்தூக்கியருளின காலத்து |
|
எரி கான்று |
– |
நெருப்பை உமிழா நின்று கொண்டு |
|
அடங்கார் |
– |
எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை |
|
ஒடுங்குவித்து |
– |
வாய்மாளப் பண்ணிற்று |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகளந்தருளின காலத்தில் திருவாழி திருச்சங்குகளோடு நித்யஸூரிகளுக்கு நேர்ந்த ஸம்ப்ரமத்தைப் பேசுகிறாரிதில். எம்பெருமான் மாண்குறள்படியே கொடுப்பதாக இசைந்து தாரைவார்க்கத் தொடங்கும்போது அஸுரகுருவான சுக்கிரன் தடைச் செய்யவும், பிறகு முவடிமண்ணை எம்பெருமான் அளந்து கொள்ளத் தொடங்கும்போது “என்னிதுமாயம்! என்னப்பனறிந்திலன், முன்னைய வண்ணமே கொண்டளவாய்“ என்று நமுசி வந்து தடை செய்யவும் நேர்ந்து, இவ்விரோதிகளெல்லாம் தொலைந்து எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை அளக்கப்பெற்ற ஸ்ந்தோஷ மிகுதியினால் திருச்சங்காழ்வான் இடத்திருக்கையிலிருந்துகொண்டு பகைவர் அஞ்சி நடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான். திருவாழியாழ்வான் வலத்திருக்கையிலிருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண்ணும்படி பெருஞ்சுடர் விட்டு ஜ்வலித்தான்.
மெத்தென்ற பஞ்சசயனம்போன்ற சேஷசயனத்தின் மீது இனிதாகத் திருக்கண் வளர்ந்தருள வேண்டிய பெருமான் ஆச்ரிதார்த்தமாகக் காடு மோடையுமளக்க நேர்ந்ததே! என்னும் வயிற்றெரிச்சல் ஆழ்வார்க்கு உள்ளமை பின்னடிகளிற் போதரும்.
விடங்காலுந்தீவாயரவு – அறிவில் தலைகின்ற நித்யஸூரிகளுக்கும் எம்பெருமானிடத்துப் பரிவு மிகுதியினால் அஸ்தாநத்தில் பயசங்கை உண்டாவதுண்டு, நித்யர்களும் முக்தர்களும் திரண்டு ‘ஹாவு ஹாவு ஹாவு‘ என்று ஸாமகோஷம் செய்யாநின்றாலும் அதனை ஸாமகோஷமென்று தெவித்து கொள்ளாமல் ‘அஸுர ராக்ஷஸர்கள் இவ்விபூதியிலும் வந்து ஆரவாரஞ் செய்கின்றனர்‘ என்று பிரமித்துத் திருவனந்தாழ்வான் விஷத்தைக் கக்குகின்றன்னென்கை. “ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்றார் திருமழிசைப் பிரானும்.
English Translation
When the ocean-hued Lord-on-the-fire-spitting-venomous –serpent raised his petal-soft foot to measure the Earth, the dextrally called conch on his left blew a clarion call, while the radiant discus on his right subdued his detractors and shone like the day.
