(2243)
பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
பெருத்தெருத் தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு.
பதவுரை
|
பெண் நசையின் பின் போய் |
– |
நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு, |
|
ஏறின் |
– |
விருஷபங்களினுடைய |
|
பெருத்த எருத்தம் |
– |
பெருத்த முசுப்புகளும் |
|
கோடு |
– |
கொம்புகளும் |
|
ஓசிய |
– |
முறியும்படியாக |
|
எருத்து |
– |
(அந்த ரிஷபங்களின்) கழுத்தை |
|
இறுத்த |
– |
முறித்த |
|
நல் ஆயர் ஏறு |
– |
விலக்ஷணனான கோபாலகிருஷ்ணன் |
|
மாறு |
– |
(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன். |
|
என்று சொல்லி |
– |
என்றெண்ணி |
|
வணங்கினேன் |
– |
அவனை ஆச்ரயித்தேன் |
|
முன் |
– |
இதற்குமுன்பு |
|
பேறு ஒன்றும் அறியேன் |
– |
இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன் |
|
பேதைமையால் |
– |
அப்படி அறியாதிருந்ததனால் |
|
பெற்று அறியேன் |
– |
அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்படி ஆச்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தங்களைப் போக்கி அபேக்ஷிதங்களையும் தந்தருள்வனென்று அவனைப் பற்றினேனென்கிறார். நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்கு இடையூறாயிருந்த ஏழ் விடைகளையுமு வென்றடர்ந்து அவளை யணைந்துகொண்ட பெருமான் அவ்விதமாகவே நம்மோடு சேர்வதற்கும் பிரதிபந்தகமாயுள்ள பாவங்களைத் தொலைத்து நம்மையு மணைந்தருள்வனென்று கருதி அவன் திருவடிகளில் தலைசாய்த்தேன். அநாதிகாலம் அவிவேகியாய் இழந்தொழிந்த நான் இன்று இப்போது பெற்றேன் என்றாராயிற்று.
English Translation
Then I did not know my purpose, not learnt it from others, it was my tally. Desiring to change myself I offered worship at the feet of Nappinnai’s fighter-bull Lord who destroyed seven angry bulls.
