(2240)
அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, – இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து.
பதவுரை
|
அருள் புரிந்த சிந்தை |
– |
அருளோடு கூடின திருவுள்ளத்தை |
|
அடியார் மேல் வைத்து |
– |
அடியவராகிய எங்கள் மேலே வைத்து |
|
பொருள் தெரிந்து |
– |
அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி |
|
காண்குற்ற அப்போது |
– |
கடாக்ஷித்தருளுகிற காலத்திலே |
|
இருள் இரிந்து |
– |
அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று |
|
நோக்கினேன் |
– |
ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன் |
|
நோக்கி |
– |
அப்படி ஆராய்ந்து |
|
ஒன் கமலம் அது |
– |
அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத்திருவடிகளை |
|
நினைந்தேன் |
– |
(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன் |
|
ஓர்ந்து |
– |
(இத்திருவடிகள் தவிர நமக்கு வேறுபுகலில்லையென்று நிரூபித்து |
|
என்னையும் |
– |
ஆத்மாவையும் |
|
அங்கு |
– |
அத்திருவடிகளிலே |
|
ஒக்கினேன் |
– |
ஸமர்ப்பித்தேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தையே பேசுகிறார் தாய்தந்தையர்க்கு மக்களிடத்தில் இயற்கையாக வாத்ஸல்யமிருப்பதுபோல எம்பெருமானும் அடியவராகிய நம்மிடத்து ஸஹஜமான வாத்ஸல்யத்தை நிலைநிறுத்தி அபதார்த்தமாய்க் கிடந்த நம்மைப் பதார்த்தமாக்கிக் கடாக்ஷித்தருளின படியாலே. எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள அநாதிஸம்பந்தத்தை அறியவொட்டாமல் தடையாய்க்கிடந்த அஜ்ஞானவிருள் தொலையப்பெற்று ஸ்வரூபஜ்ஞாநம்பெற்று அவனுடைய திருவடித்தாமரைகளை அநுஸந்திக்கப்பெற்றேன், அத்திருவடிகளிலேயே ஆத்மஸமர்ப்பணமும் பண்ணப்பெற்றேன் என்றாராயிற்று.
“அடியார்மேல் வைத்து“ என்று படர்க்கையாயிருந்தாலும் தன்மையில் நோக்கென்று கொள்க‘ அடியேன்மேல் வைத்து‘ என்பதே கருத்தாகும். “பொருள் தெரிந்து“ – 1. “பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யடிமைகொண்டாய் என்றவாறு. இனி, “பொருள் தெரிந்து“ என்பதற்கு – அர்த்தபஞ்சகத்தை நாங்கள் தெரிந்துகொள்ளுமாறு என்றும் பொருள்கொள்ளலாம். நம்மால் அடையத்தக்க எம்பெருமானுடைய ஸ்வரூபம் எம்பெருமானை அடையுமவனான சேதநனுடைய ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெறும்பேறு அப்பேற்றை அடையவொட்டாமல் நடைசெய்கிற விரோதிகளின் தன்மை – ஆகிய இவை ஐந்தும் அர்த்தபஞ்சகமெனப்படும். இவற்றை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி கடாக்ஷித்தருளினமையாலே அகவிருள் நீங்கி அடியவரானோம் என்கை.
இரண்டாமடியின் தனிச்சீர் “இருள் திரிந்து“ என்று ஓதப்பட்டு வருமாயினும் இருளிரிந்து என்றபாடமே புராதமும் சிறந்ததுமாம். ஒண்கமலம் – ஒண்கமலம் போன்ற திருவடி என்றபடி, முற்றுவமை.
English Translation
With Lakshmi’s grace falling on devotees, when the Lord revealed his true nature dispelling darkness, I was able to see clearly. With a clear vision I contemplated on the Lord’s lotus feet and surrendered myself to him.
