(2239)

(2239)

நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து

ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, – வேம்பின்

பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,

அருள்நீர்மை தந்த அருள்.

 

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்

(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும் வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகந்தோன்றினாலும்

பொன் ஆழி

அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தியழகை)

பாடு என்று

பாடக்கடவாய் என்று

நா மங்கை

ஸ்ரஸவதியானவள்

நெஞ்சத்து

(நமது) நல்ல நெஞ்சிலே

ஒம்பி இருந்து

ஆதரித்து இருந்து

எம்மை

நீர்மைக்கொண்டு

ஓது வித்து

பகவத்விஷயத்தைப் பாடச்செய்ததனால்

நாம் பெற்று நன்மையும்

தாம் அடைந்த ஸுக்குதமு (எதனாலே வந்ததென்னில்)

அருள் நீர்மை தந்த அருள்

அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “எனக்குத் தேனே பாலே நன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனோகி“ என்று மஹான்களுக்கு எம்பெருமான் பரமபோக்யனாயிருப்பனாயினும் அரஸகனான பாவியேனுக்கு வேம்பாயிப்பன், ஆயினும் “இந்த பகவத் விஷயத்தை நீ பாடக்கடவை“ என்று எம்பெருமான் தானாகவே திருவருள் கூர்ந்து நியமித்ததன் பலனாகவே ஸரஸ்வதியானவள் நம்முடைய ஹருதயத்திலே வீற்றியிருந்து சப்தாரிகளைத் தொடுக்கச் செய்தாளென்கிறார்.

நாமங்கை – நாவில்வாழும்பெண், ஸரஸ்வதி, பொன்னாழிபாடு –பொன்னாழியைப்பாடு எனினும், பொன்னாழியையுடைய எம்பெருமானைப்பாடு எனினும் ஒக்கும்.

 

English Translation

Though praising the discus Lord has the bitterness of Neem, Dame sarasvali resides in our heart and motivates us to sing.  This is our good fortune graced by the lotus-dame Lakshmi. ‘

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top