(2218)

(2218)

இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,

திருந்து திசைமுகனைத் தந்தாய், – பொருந்தியநின்

பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்

ஏதங்க ளெல்லா மெமக்கு.

 

பதவுரை

இரு

பெரிய

தண்

குளிர்ந்த

கமலத்து

திருநாபிக்கமலத்தின்

இரு மலரின் உள்ளே

பெருமை பொருந்திய பூவில்

திருந்து

ஸமர்த்தனான

திசைமுகனை

நான்முகக் கடவுளை

தந்தாய்

படைத்தருளின பெருமானே!

பொருந்திய

ஸர்வலோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தியிருக்கிற

நின்

உன்னுடைய

பாதங்கள்

திருவடிகளை

ஏத்தி

வாயாரத் துதித்து

பணியா ஏல்

வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்

எமக்கு

எங்கட்டு

பல் பிறப்பும் எல்லாம்

பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்

ஏதங்கள்

பயனற்றவையே யாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி எம்பெருமானிடத்து அந்வயிப்பதற்குப் பாங்கல்லாத பிறவிகள் வீண் என்கிறார்.  எம்பெருமான் ஆத்மாக்களுக்குப் பல ஜன்மங்களை யுண்டாக்குவது ஒரு ஜன்மததிலில்லாவிட்டாலும் ஒரு ஜன்மத்திலாவது இவை நம்மை ஆச்ரயித்து ஈடேறவேணுமென்னும் விருப்பத்தினாலேயே இந்த விருப்பம் நிறைவேறாவிடில் ஆத்மாக்களுக்கு நேர்கின்ற பிறவிகளெல்லாம் வியர்த்தமேயென்க.

பின்னடிகளுக்கு வேறு வகையாகவுங் கருத்துரைக்கலாம்; எனக்கு நேர்ந்த   பல பிறவிகளும் உன் நினைவின்படி  உன்னை ஆச்ரயிப்பதற்கு உறுப்பாகவேணும்.  அங்ஙனம்  ஆகாவிடில், உலகத்திலே பிறக்கின்ற உயிர்களின் துயரமெல்லாம் என்னொருவனுக்கு உண்டாகும் – என்று இக்கருத்தில், ஏதங்கள் – துக்கங்கள் என்கை.

முன்னடிகளில், ‘ நான்முகனை உந்திக்கமலத்தில் தோற்றுவித்தவனே!’ என விளித்தது – முமுக்ஷûக்கள் சரணம் பற்றுதற்கு உரியவனே! என்றபடி; இப்பொருள் எங்ஙனே கிடைக்குமெனில்; “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்… முமுக்ஷûர்வை சரணமஹம் ப்ரபத்யே” (முதலில் பிரமனைப் படைப்பவன்யாவனோ அப்பெருமானை முமுக்ஷுவாகிய நான் சரணம் புகுகின்றேன்) என்பதாக உபநிஷத்தில் ஓதியிருப்பதுகொண்டு இப்பொருள் கிடைக்குமென்பது பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்.

திருத்து திசைமுகன் = ஸ்ருஷ்டி செய்யவேண்டும் விதத்தை ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிட்டால் அதில் அடிக்கடி ஸந்தேகங் கொண்டிராமல் புத்தி சாதுர்யத்தாலே முற்றும் நிர்வஹிக்கவல்ல நான்முகன்.

 

English Translation

Again and again taking birth in this body, if we have not learnt to worship your perfectly matching lotus feet, all these lives are a total waste. O Lord! On your lotus navel sits brahma the creator!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top