(2147)
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
பேராழி கொண்டான் பெயர்.
பதவுரை
|
உலகம் |
– |
உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள் |
|
காலை எழுந்து |
– |
(ஸத்வகுணம் வளரக் கூடிய ) விடியற்காலையில் துயில் விட்டெழிந்து |
|
கற்பனவும் |
– |
அப்யஸிப்பனவும், |
|
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர் |
– |
படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள் |
|
வேட்பனவும் |
– |
ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும். |
|
(எவையென்றால்) |
||
|
வேலைக்கண் ஓர் ஆழியான் |
– |
திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியையுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய |
|
அடியே |
– |
திருவடிகளேயாம்; |
|
ஓதுவதும் |
– |
மஹான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும் |
|
ஓர்ப்பனவும் |
– |
மநநம் பண்ணப் பெறுவனவும் |
|
(எவையென்றால்) |
– |
|
|
பேர் ஆழி கொண்டான் |
– |
பெரிய கடல்போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய |
|
பெயர் |
– |
திருநாமங்களேயாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே” [உலகம் என்னுஞ்சொல் மிகப்பெரிய மஹான்களைக் குறிக்கும் ] என்று கூறியிருப்பதனால், இப்பாட்டின் முதலடியிலுள்ள உலகம் என்னுஞ்சொல் ‘ உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்’ என்னும் பொருளிலே பிரயோகிக்கப்பட்ட்து. அறிவு நிரம்பிய பெரியோர்கள் எம்பெருமானது திருவடிகளையும் அவனது திருநாமங்களையுமே காண்பதுங் கேட்பதுமாயிருப்பர்களென்கிறாரிப்பாட்டில்.
மேலைத்தலைமறையோர்- கீழ்வேதமென்றும் மேல்வேதமென்றும் வேதம் இருவகைப்படும்: கீழ்வேதமென்பது கர்மகாண்டம்; மேல்வேதமென்பது ப்ரஹ்மகாண்டம் (உபநிஷத்பாகம்); ஆகவே, மேலைத்தலைமறையோரென்றது வேதாந்திகளென்றபடி.
English Translation
The whole world wakes up in the morning remembering the discus Lord. The learned and wise Vedic seers of high merit desire, discuss and recite, the names of the lord reclining in the ocean.
