(2118)
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.
பதவுரை
|
வகை அறு |
– |
அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறுதியிடுவதற்குறுப்பான |
|
நுண் கேள்வி வாய்வார்கள் |
– |
ஸூக்ஷ்மார்த்தச்ரவணமுடையவர்களான |
|
வேதியர்கள் |
– |
வைதிகர்கள் |
|
நாளும் |
– |
நித்தியமும் |
|
புகை விளக்கும் |
– |
தூபதீபங்களையும் |
|
பூ புனலும் |
– |
புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் |
|
ஏந்தி |
– |
தரித்துக்கொண்டு |
|
திசை திசையின் |
– |
பலதிக்குக்களில் நின்றும் |
|
சென்று |
– |
வந்து சேர்ந்து |
|
இறைஞ்சும் |
– |
வணங்குமிடமான |
|
வேங்கடம் |
– |
திருவேங்கடமலையானது, |
|
வெண்சங்கம் ஊதிய வாய் மால் |
– |
வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான் |
|
உகந்த |
– |
திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கப்பெற்ற |
|
ஊர் |
– |
திவ்யதேசமாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மூன்று பாசுரங்களாலே திருமலையை அநுபவிக்கிறார். எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடமலை யென்கிறார். அத்திருமலை எப்படிப்பட்ட தென்னில்; தினந்தோறும் பல பல திசைகளினின்றும் வைதிகர்கள் வந்து தூபதீபம் முதலிய திருவாராதநஸாமக்ரிகளைக்கொண்டு ஆச்ரயிக்கப்பெற்றது – என்கிறார். அந்த வைதிகர்கட்கு விசேஷணமிடுகிறார் வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் என்று ஸூக்ஷ்மமான சாஸ்த்ரார்த்தங்களையும் அலகலகாக நிச்சயித்தறியக் கூடிய கேள்வி வாய்ந்தவர்கள்- பஹூச்ருதர்கள் என்றபடி.
வெண்சங்க மூதியது பாரதப்போரில்.
English Translation
Your favoured abode is venkatam, O Lord Tirumal who blows the white conch Panchajanyal vedic seers of high merit and learning gather from all Quarters with lamp, incense and water to offer worship.
