(2016)

(2016)

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,

கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட

மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்

கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.


பதவுரை

மைஆர் கடலும்

கருங்கடலையும்

மணிவரையும்

நீலமணிமயமான மலையையும்

மா முகிலும்

காளமேகத்தையும்

கொய் ஆர் குவளையும்

பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும்

காயாவும்

காயாம்பூவையும்

போன்று

ஒத்து

இருண்ட

கறுத்த

மெய்யானை

திருமேனியையுடையவனும்

மெய்யம் மலையானை

திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும்

சங்கு ஏந்தும் கையானை

திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை

தொழா

அஞ்சலிபண்ணாத

கை

கைகளானவை

கை அல்ல

கைகளேயல்ல

கண்டாம்

(இதனை நாம் நன்கு) அறிவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்சேச்வரனைத் தொழாத கைகள் கையல்ல, உலக்கையே என்றதாயிற்று. கைதொழாக் கையல்ல-தொழாக்கை கையல்ல என்று அந்வயிப்பது. கையல்ல, உலக்கையே.

 

English Translation

The Lord has a dark hue like the deep ocean, the gem mountain, the laden cloud, the blue lotus and the kaya flower.  He bears a conch in his hand, and resides in Tirumeyyam. Those who do not fold their hands in worship hae no hands, We know it, –

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top