(2015)

(2015)

கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,

ஓடா அடலரியை உம்பரார் கோமனை,

தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்

பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே.

 

பதவுரை

கூடா

பகைவனான

இரணியனை

ஹிரண்யாஸுரனுடைய

மார்வு

மார்பை

கூர் உகிரால்

கூர்மைபொருந்திய நகங்களாலே

இடந்த

கீண்டருளின

ஓடா

(அவ்விரண்யனுக்குப் பின்வாங்காத

அடல்

வீரம்பொருந்திய

அரியை

நாசிங்கமூர்த்தியானவனும்

உம்பரார் கோமானை

நித்யஸூரிகட்குத் தலைவனும்

தோடு ஆர் நறு துழலாய் மார்வனை

இதழ்கள் மிக்க நறுந்துளப மாலையணிந்த திருமார்பையுடையனுமான எம்பெருமானை

ஆர்வத்தால்

அன்புடனே

பாடாதார்

பாடப்பெறாதவர்களுடைய

பாட்டு

பாட்டுக்களானவை

என்றும்

ஒருநாளும்

பாட்டு அல்ல

பாட்டுக்களாகமாட்டா

கேட்டோம்

(என்று நாம் பெரியோர்களிடத்தில்) கேட்டிருக்கிறோம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

ஓடாவடலாரியை-இரணியனைக்கண்டு பின்வாங்கியோடாத நரசிங்கம்; இனி ஓடுதல் நடையாடுதலாய், நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரசிங்கம் என்னவுமாம்.

 

English Translation

The fierce lion-form that came and destroyed the perverse Hiranya by learning his chest with claws, is the Lord of gods.  He wears a cool fragrant garland of Tulasi.  Songs which do not sing his praise with love are no songs at all, so we have heard.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top