(2009)

(2009)

மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்,

புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம்  ஏழினையும் ஊழில்வாங்கி,

அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட,

நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.

 

பதவுரை

மறம் கிளர்ந்த

கொடுமைபொருந்திய

கருங்கடல் நீர்

கருங்கடலின் வெள்ளமானது

உரம்

வேகத்தோடு

துரந்து

ஓடி

பரந்து

சுற்றும்பரம்பி

அண்டத்து அப்பால் புறம்

அண்டகடாஹத்திற்கு அவ்வருகாக

ஏறி

வியாபித்து

கிளர்ந்த காலத்து

விரும்பத்தக்க

உலகம் ஏழினையும்

உலகங்களை யெல்லாம்

ஊழில்

முறைமையாலே

வாங்கி

வாரிப்பிடித்து

அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து

தருமம் விஞ்சின திருவயிறினுட்புறத்திலே வைத்து

உம்மை

உங்களை

உய்யக்கொண்ட

உஜ்ஜீவிப்பித்த

கரு நிறம் கிளர்ந்த

கருமை மிக்கிருந்துள்ள

சோதி

தேஜஸ்ஸையுடைய

நெடுந் தகையை

ஸர்வேச்வரனை

நினையாதார் தாம்

சிந்திக்கப்பெறாதவர்க்ள

நீசர்

இழிகுலத்தவரேயாவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கருங்கடல்தானே கொடுமை பொருந்தியதாகிக் கனவேகமாகப் பாய்ந்தோடிச் சுற்றும் பரம்பி அண்ட கடாஹத்துக்கு அவ்வருக்காகக் கிளர்ந்த மையத்திலே, இவ்வுலகங்கட்கெல்லாம் நம்முடைய வயிறல்லது வேறு புகலில்லையென்று திருவுள்ளம்பற்றித் தன்னுடைய ஸ்வாமித்வஹேதுவாக ஏழுலகங்களையும் வாரிப்பிடித்துத திருவயிற்றினுள்ளே வைத்து ரக்ஷித்தருளி அதனால் திருமேனி புகர்படைத்தவனான பரஞ்சோதிப் பெருமானை நினைக்க மாட்டாதவாகளுக்கு மேற்பட்ட நீசரில்லை என்றாராயிற்று.

 

English Translation

When the terrible dark deluge came rushing, wreaked havoc, and rose above the Earth, the Lord contained the golden worlds in his huge stomach.  Those who do not contemplate the dark-hued radiant Lord and protector are indeed lowly.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top