(2008)
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூடி, அவனையுள்ளத்
தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லா மினியவாறே.
பதவுரை
|
மண் நாடும் |
– |
பூலோகமும் |
|
விண் நாடும் |
– |
சுவர்க்கமும் |
|
வானவரும் |
– |
தேவர்களும் |
|
தானவரும் |
– |
அசுரர்களும் |
|
மறறும் எல்லாம் |
– |
மற்றுமுண்டான பொருள்களுமெல்லாம் |
|
உண்ணாத |
– |
தகைய வொண்ணாத |
|
பெரு வெள்ளம் |
– |
மஹாப்ரவாஹம் |
|
உண்ணால் |
– |
(உலகத்தை) விழுங்காதபடி |
|
தான் விழுங்கி உய்யக் கொண்ட |
– |
தான் திருவயிற்றிலே வைத்து நோக்கி |
|
கண்ணாளன் |
– |
பரமதயாளுவும் |
|
கண்ணமங்கை நகராளன் |
– |
திருக்கண்ணமங்கைத் தலத்திற்குத் தலைவனுமான எம்பெருமானுடைய |
|
கழல் |
– |
திருவடிகளை |
|
சூடி |
– |
சிரமேற்புனைந்து |
|
அவனை |
– |
அப்பெருமான் |
|
உள்ளது |
– |
நெஞ்சிலே |
|
எண்ணாத |
– |
சிந்திக்கமாட்டாத |
|
மானிடத்தை |
– |
மனிசர்களை |
|
எண்ணாத போது எல்லாம் |
– |
நினைக்கப்பெறாதகால மெல்லாம் |
|
இனிய ஆறே |
– |
எமக்கு இனிதாகச் செல்லும் விதம் என்னே! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அவனையுள்ளத் தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்ல மினியவாறே” என்றருளிச் செய்கின்ற இவ்வாழ்வாருடைய உட்கருத்து யாதெனில்; ஒருவன் பகவத் பாகவதர்களைச் சிந்திக்கவுமாம், சிந்தியாதொழியவுமாம்; பகவத்பரகவத விரோதிகளை நெஞ்சாலும் நினைக்கப் பெறாதிருந்தால் அதுவேபோதும் என்றதாம். இங்கே வியாக்கியான வாக்கியமுங் காண்மின்:-“ஜ்ஞாநமும் வேண்டா; வைஷ்ணவ ஸஹவாஸமும் வேண்டா அவைஷ்ணவாக்ளை நினையாதபோது இனிதென்கை.”
English Translation
Protectig Heaven and Earth, gods and the Asuras and everyone else from the all-engulfing deluge. He swallowed all and saved them. He is our benevolent Lord of Kannamangai city. Those who do not worship his feet and keep him in their hearts are no men. The moments we spend ignoring them are sweet!
