(2006)
பாராரும் காணாமே பரவைமா நெடுங்கடலே யானகாலம்,
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது,
உள்ளத் தோராத வுணர்விலீர். உணருதிரேல் உலகளந்த வும்பர்கோமான்,
பேராளன் பேரான பேர்களா யிரங்களுமே பேசீர்களே.
பதவுரை
|
பார் |
– |
பூமியிலே |
|
ஆரம் காணாமே |
– |
ஒருவரையும் காணவொண்ணாதபடி |
|
பாவை மாநெடு கடலே ஆன காலம் |
– |
பரந்திருந்துள்ள மஹா ப்ரளய வெள்ளமேயான சமயத்தில் |
|
ஆரானும் |
– |
எவரும் |
|
அவனுடைய திருவயிற்றில் |
– |
அப்பெருமானுடைய திருவயிற்றில் |
|
நெடுங்காலம் கிடந்த்து |
– |
வெகுகாலம் வரையில் அடங்கியிருந்ததை |
|
உள்ளத்து |
– |
நெஞ்சிலே |
|
ஓராத |
– |
சிந்திக்கப்பெறாத |
|
உணர்வு இலீர் |
– |
மூடர்களே! |
|
நீங்கள் |
||
|
உணருதிர் எல் |
– |
சேதனார்களாயிருப்பீர்களாகில் |
|
உலகு அளந்த |
– |
உலகங்களை யளந்தருளின |
|
உம்பர் கோமான் |
– |
நித்யஸூரிநாதனாய் |
|
பேராளன் |
– |
பெருமைபொருந்தியவனான எம்பெருமானுடைய |
|
பேர் ஆன |
– |
திருநாமங்களான |
|
பேர்கள் ஆயிரங்களுமே |
– |
ஸஹஸ்ரநாமங்களையே |
|
பேசீர்கள் |
– |
பேசுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பூமண்டலத்தில் ஒருத்தரையுங் காணவொண்ணாதபடி எங்கும் தானேயாய்க் கொண்டு கடல்வெள்ளம் பரம்பினகாலத்திலே ஒருவர் தப்பாமல் எம்பெருமானுடைய திருவயிற்றிலே நெடுங்காலம் கிடந்து ஸத்தை பெற்ற தன்மையை ஆராயமாட்டாத அறிவு கேடர்காள்! நீங்கள் பெற்றிருக்கிற சைதந்யம் பயன்படவேண்டில், தன்னுடைய ஸர்வஸ்வாமித்வம் தோன்ற பேசிக்கொண்டிருத்தல் உங்கட்குத் தக்கதாம் என்றராயிற்று.
பாட்டினடியில் பார் என்று நிலவுலகத்தைச் சொன்னது மற்றுமுள்ள உலகங்கட்கும் உபலக்ஷணமென்க
English Translation
O Foolish people! Do you not realise that when not a bit of land could be seen and the whole world was one big ocean, everyone was in his auspicious stomach for a very long time? If you can understand this, prate the thousand names of the Lord of gods who measured the Earth.
