(2005)

(2005)

பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலே யானகாலம்,

இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி

முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில் வைத்தும்மை உய்யக்கொண்ட

கனிகளவத் திருவுருவத் தொருவனையே கழல்தொழுமா கல்லீர்களே.


பதவுரை

பார் எல்லாம்

பூமியடங்கலும்

பனி பாவை

குளிர்ந்துபரந்திருக்கிற

திரை

அலைகளானவை

ததும்ப

எறியும்படி

நெடுங்கடலே ஆன சாலம்

மஹாப்ரளய வெள்ளமே பரந்தபோது

இவர்க்கு

இவ்வுலகத்தார்க்கு

இனி

இனிமேல்

களை கண் இல்லை என்று

ரக்ஷகராவார் ஆருமில்லை என்று

உலகம் ஏழினையும்

உலகங்களெல்லாவற்றையும்

ஊழில் வாங்கி

முறையாலே வாங்கி

முழங்கு ஒலி சேர் திருவயிற்றில் வைத்து

மஹாகோஷம் நிரம்பிய திருவயிற்றினுள் வைத்து

உம்மை

உங்களை

உய்யக் கொண்ட

உஜ்ஜீவிப்பித்தருளினவனும்

முனி தலைவன்

ஸாத்விகர்களில் தலைவனும்

கனி களவம் திரு உருவத்து ஒருவனையே

கனிந்த களாப்பழம் போன்ற திருவுருவத்தை யுடையனுமான ஒரு பெருமானையே

கழல் தொழும் ஆ

திருவடிதொழும்படியை

கல்லீர்களே

கற்கமாட்டீர்களோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

முனித்தலைவன் = நெஞ்சினுள்ளே சிந்தை செய்பவதற்கு முனி யென்று பெயர்; எப்போதும் உலகங்கட்கு நன்மையைச் சிந்தை செய்பவனான தலைவன் என்றபடி. இவ்வுலகங்களெல்லாம் திருவயிற்றினுள்ளே புகம்போது உண்டாகக்கூடிய ஆரவாரத்தின் மிகுதியைச் சொல்லுகிறது ‘முழங்கொலிசேர்திருவயிறு’ என்று.

 

English Translation

When the whole Earth was covered by the cold rocking waters of one big ocean the Lord appeared says, “They have no protection only more”, and took the whole Universe into his great bit golden stomach. He is the ripe Kalakkal-fruit-hued Lord and master of the sages. He is your protector.  Yet you have not learnt to worship him with single-minded devotion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top