(1982)
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை என்ன அரணாவ னென்னு மருளால்
அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவா திறைஞ்சென் மனனே.
பதவுரை
|
என் மனனே |
– |
என் நெஞ்சமே! |
|
எங்கும் நிலை இடம் இன்றி |
– |
நிலைத்து நிற்கைக்கு, ஓரிடமுமில் லாமல் |
|
நெடு வெள்ளம் |
– |
மஹாப்ரள யவெள்ளமானது |
|
உம்பர் |
– |
மேலுலகத்தவாக்ளுடைய |
|
வளம் நாடு |
– |
செழிப்புற்றிருந்த ஸ்தானங்களை |
|
மூட |
– |
வியாபித்தவளவிலே |
|
இமையோர் |
– |
தேவர்கள் (அஞ்சிநடுங்கி) |
|
எமக்கு |
– |
எங்களுக்கு |
|
தலை இட |
– |
தலைவணங்கி யாசிக்க |
|
மற்று ஓர் சரண் இல்லை |
– |
உன் தருவடி தவிர வேறொரு புகலிடமில்லை |
|
என்ன |
– |
என்று விண்ணப்பஞ்செய்து நமஸ்காரிக்க |
|
அரண் ஆவன் என்னும் அருளால் |
– |
‘உங்களுக்க நான் சரணமாகிறேன்’ என்று கொண்ட கிருபையினாலே |
|
(அவர்கட்கு நிலையிடம் தருவதற்காக) |
||
|
அலை கடல் நீர்குழாய் |
– |
அலையெறிகின்றஸமுத்ரஜலம் குழம்பாகும்படியாகவும் |
|
அதடு |
– |
தன்கீழ் வயிற்றிலே |
|
ஆட |
– |
அலையெறியும்படியாகவும் |
|
ஆகல் வான் |
– |
அகன்ற ஆகாசத்திலே |
|
ஓடி |
– |
(பிரமன் முதலியோருடைய குடியிருப்பிலே) சென்றோடி |
|
உரிஞ்ச |
– |
வீசும்படியாகவும் |
|
முதுகில் |
– |
தன் திருமுதுகிலே |
|
மலைகளை |
– |
மலைகளை |
|
மீது கொண்டு |
– |
ஏறிட்டுக்கொண்டு |
|
வரும் |
– |
வருகிற |
|
மீனை மாலை |
– |
மத்ஸ்யரூபியானஎம்பெருமான் |
|
மறவாது |
– |
ஒருகாலும் மறவாமல் |
|
இறைஞ்சு |
– |
வணங்குவாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மதஸ்யாவதார வரலாற்றை அநுஸந்திக்கிற பரசுரம் இது. பிரளயாபத்தில் நின்றும் பிரஜைகளைக் காத்தருளினதும், அசுர்ர் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டு உபகாரித்தருளினதும் மத்ஸ்யாவதார வரலாறு. பிரளயாபத்தில் நின்றும் ரக்ஷித்தருளின மஹோப்காரம் இப்பாசுரத்தில் பேசப்பட்டது. கூரத்தாழ்வானருளிய ஸுந்தரபாஹுஸ்தவத்தில் (தஸாவதார ஸ்தோத்ர ப்ரகரணத்தில்) “வமுயசுநீளவ_ரவனிவனி “ என்ற ச்லோகம் ஓசையின்பமும் பொருள் நயமும் ஒற்றுமைப்பட இப்பாசுரத்திற்கே சிறந்த மொழி பெயர்ப்பாக அமைக்கப் பட்டிருக்கின்றதென்பது இங்கு அறியத்தக்கது. இப்பாசுரத்தின் அடிதோறும் ஒன்று நீங்கலாக இருபத்து மூன்றெழுத்துக்கள் அமைந்திருப்பதற்கிணங்க அந்த ச்லோகத்திலும் பாதந்தோறும் இருபத்துமூன்று அக்ஷரங்கள் அமைந்திருப்பதும் அறியத்தக்கது.
‘நிலையிடமெங்குமின்றி’ என்றது நெடு வெள்ளத்திலும் அந்வயிக்கலாம், இமையோரிலும் அந்வயிக்கலாம்; நிலைகொள்ளலாவதோரிடமுமில்லாமல் ஆழங்காலாயிருக்கிற நெடுவெள்ளம் என்னவுமாம்; ஒரிடத்தில் நில்லாதே அலைந்துவருகிற நெடுவெள்ளம் என்னவுமாம். இனி இமையோர்களிடத்து அந்வயிக்கும்போது; நெடு வெள்ளமானது உம்பர்வளநாட்டை மூடினவளவிலே இமையோர்க்ள் (எங்கும் நிலையிடமின்றி) ஓரிடத்திலும் கால்பாவி நிற்கமாட்டாமல் என்பதாகப் பொருள்கொள்க. இமையோர்கட்கு நிலையிடம் அமைத்துக் கொடுப்பதற்காகவே எம்பெருமான் மீனாய்த் திருவவதாரித்துக் கடலினுள்ளிருந்த குலமலைகளைத் திருமுதுகிற் சுமந்து கொண்டுவந்து வெளிப்படுத்தினனென்க.
‘தலையிடமற்று’ என்பதை ‘தலை இட மற்று’என்றும் ‘தலை இடம் அற்று’ என்றும் பிரிக்கலாம். முந்தின யோஜனையில் இமையோர்க்ளின் வார்த்தையாகும். ‘இப்படிப்பட்ட மஹரப்ரளய ஆபத்தைப் போக்கவேணும்’ என்று நாங்கள் ஒருவன் காலிலே தலையைமடுப்பதற்கு உன்னையொழிய வேறொரு நாதனையுடையோமல்லோம் என்று தேவர்கள் முறைப்பட,’நான் இருக்க நீங்கள் அஞ்சவேணுமோ? நான் ரக்ஷிக்கிறேன்’ என்று தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அருந்தொழில் செய்த எம்பெருமானை மனமே! ஒருநாளும் மறவாது இறைஞ்சு என்கிறார்.
“ஸர்வாதிகனான ஸர்வேச்வரன் தன்னுருக்கெடுத்து வேற்றுருக்கொண்டு அரியன செய்து ரக்ஷியாநின்றான்; உனக்குச் செய்யவேண்டும் அருந்தேவை அவனை மறவாதிருக்கை; இத்தனையும் செய்யப்பாராய்; மறக்கவொண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாதிருக்க வேண்டாவோ?” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்க.
English Translation
When the whole world was deep in deluge waters, even the gods above were made to live in fear. “Lord our Master! Sole Refuge, O! Maker! Grant us a place to be”, they said, Lord! You came then as fish in deep ocean, hauling mountain-like rocks on thy frame, splashing mirthfully, gliding on your belly I praise, and never fail, O Heart! the Avatara!
