(1951)

(1951)

தொண்டீர். பாடுமினோ,

சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன்,

ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள்,

தொண்டீர். பாடுமினோ.


பதவுரை

தொண்டீர்  அன்னே!

பாகவதர்களே

சுரும்பு ஆர்            பொழில்

வண்டுகள் நிறையப்படிந்த சோலைகளையுடைய

மங்கையர் கோன்

திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்குத் தலைவரும்

ஒண் தர்வேல்

அழகிய மாலையையும் வேற்     படையையுமுடையவருமான்

கலியன்

ஆழ்வார்

ஒலி

அருளிச்செய்த

மாலைகள்

இச்சொல்மாலையை

பாடுமின்

பாடுங்கள்

தொண்டீர்! பாடுமின்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உண்டியே  உடையே உகந்தோடுகிற ஸம்ஸாரிகள் தங்கள் ஜீவனத்துக்கு வேண்டிய பாட்டுகளைப் பாடிப் போதுபோக்கித் திரிகிறார்கள்; அவாகள் அப்படியே தொலையட்டும்; அப்படியல்லாமல், பகவத் குணங்களிலே யீடுபட்டுத் தொண்டர் என்று புகழ் பெற்றிருக்குமவாகளே! நீங்கள் உங்கள் ஸ்வரூபத்துக்குத் தகுதியாக இத்திருமொழியைப் பாடித் திரியுங்கோள் என்கிறாராயிற்று. இத்திருமொழிகற்கைக்கு வேறொரு பலன் அருளிச் செய்யாதொழிந்தது, இதனைப் பாடுகைதானே ஸ்வயம் ப்ரயோஜநமென்று காட்டுதற்காக.

 

English Translation

Devotees! Sing these songs.-Bee-humming fragrant groves of Mangai;s king kalikanri, spear wielder;s –Devotees! Sing these songs.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top