(1946)

(1946)

சொல்லாய் பைங்கிளியே,

சுடராழி வலனுயர்த்த,

மல்லார் தோள்வட வேங்கட வன்வர,

சொல்லாய் பைங்கிளியே.

 

பதவுரை

பைங்கிளியே

பசுமைதங்கிய கிளியே!

சுடர்ஆழி

ஒளிமிக்க திருவாழிப் படையை

வலன்

வலத்திருக்கையிலே

உயர்த்த

உயரத் தாங்கியிருந்துள்ளவனும்

மல் ஆர்தோள்

மிடுக்குடைய திருத்தோள் களையுடையவனும்

வடங்கடவனை

வடதிருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமான

பெருமானை

வரசொல்லாய்

இங்குவரச்சொல்லவேணும்

பைங்கிளியே! சொல்லாய்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பைங்கிளியை நோக்கிக் கூறுகின்றாள் – கிளியே! நீ ஏதேனுஞ் சில சொற்களைச் சொல்லிக்கொண்டிருப்பதனால் என்ன பயனுண்டு? எம்பெருமானை இங்கு வரச் சொல்லு என்கிறாள். ப்ராப்திப்ரதிபந்தகங்கள் பல கிடக்கும்போது எளிதாக அப்பெருமான் இங்கு வந்திடுவானோ என்று அக்கிளி நினைக்க, அப்படி நினைக்கலாமோ? விரோதிகளை இரு துண்டமாக்குதற்குப் பாங்கான திருவாழியாழ்வானை வலத்திருக்கையில் ஏந்தியுள்ளான் காண்; அவ்வாயுதந்தானும மிகையாம்படி மிடுக்கில் குறையற்ற திருத்தோள்களையுடையவன்காண்; என்னை அணைவதற்கென்றே பயணமெடுத்துவிட்டுத் திருவேங்கட மலையிலே நிற்கிறான்காண்; அன்னவனை இங்கு வரச்சொல்லாய் என்கிறாள்.

 

English Translation

Speak, O Green Parrot! Radiant discus-bearing strong armed Lord is in Northern Venkatam! Speak his arrival.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top