(1944)

(1944)

கூவாய் பூங்குயிலே,

குளிர்மாரி தடுத்துகந்த,

மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்,

கூவாய் பூங்குயிலே.

 

பதவுரை

பூகுயிலே

அழகிய குயிலே!

குளிர்மாரி

(இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை

தடுத்து

(கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து

உகந்த

திருவுள்ளமுவந்தவனும்

மா   வாய்கீண்ட

நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும்

மணி வண்ணனை

நீலமணி நிறத்தனுமான எம            பெருமானை

வரகூவாய்

வருமாறு கூவவேணும்

பூங் குயிலே! கூவாய்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மாவாய் கீண்ட” என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “பகாஸூரனுடைய வாயைக்கிழித்த” என்று பொருள் காண்கிறது. இஃது அச்சுப் பிழையாயிருக்கலாமோ வென்று ஸந்தேகிக்கவுரியது அருளிச்செயலிற் பலபலவிடங்களில் “மாவாய் கீண்ட” என்றும் “மாவாய்பிளந்த” என்றும் வருவதுண்டு; இங்ஙனே வருமிடந்தோறும் (குதிரைவடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மஸுரனுடைய வாயைக் கிழித்த) என்றே பொருளுரைக்கப் பட்டுள்ளது. மா-குதிரை.

 

English Translation

Coo, Coo, Good koel! Stopping a halistorm, he did teat the jaws of a mighty horse, -gem Lord! Coo his arrival!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top