(1929)

(1929)

புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,

இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,

தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர்,

எக்கே இதுவென் னிதுவென் னிதுவென்னோ.

 

பதவுரை

புக்கு

(பொய்கையிலே) குதித்து

ஆடு அரவம் பிடித்து

படமெடுத்தாடுகின்ற காளிய நாகத்தைப் பிடித்து

ஆட்டும்

ஆட்டிவாட்டின

புனிதீர்

பரிசுத்தரே!

இக்காலங்கள்

இப்போது

யாம்

நாங்கள்

உமக்கு

உமக்கு

ஏது ஒன்றும் அல்லோம்

ஒருசரக்காகவும் எண்ணப்படுவோமல்லோம்,

தக்கார்

உமக்குத் தகுத்திருப்பவர்களாய்

பலர்

அளவற்றவர்களான

தேவிமார்

மஹிஷீவர்க்கங்களை

சால

மிகவும்

உடையீர்

உடையராயிருக்கின்றீர்

எக்நே

இது என்ன கஷ்டகாலம்!

இதுஎன் இதுஎன் இதுஎன்

 

English Translation

O pure one who entered the lake and shook the dancing snake! All this while we meant nothing you, You have many befitting ladies in your keep. O what is this, What is this, What is this?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top