(1926)

(1926)

சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து,

மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து,

முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர்,

எற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ.

 

பதவுரை

குழல்

திருக்குழல்களானவை

சுற்றும்

பிடரியைச்சுற்றிலும்

தாழ

தாழ்ந்தலையப்பெற்றும்

சுரிகை

உடைவாளை

அணைத்து

தரித்துக்கொண்டும்

மற்றும் பல

மற்றும் பலவகைப்பட்ட

மா மணி

சிறந்த ரத்னாபரணங்களையும்

பொன்

பொன்னுபரணங்களையும்

அணிந்துகொடு

சாத்திக்கொண்டும்

முற்றம் புகுந்து

(எங்கள்வீட்டு) முற்றத்திலே வந்து சேர்ந்து

முறுவல் செய்து

புன்சிரிப்புச் சிரித்து

ஏற்றுக்கு நின்றீர்

எதுக்காக நிற்கிறீர்?

இதுஎன் இதுஎன் இதுஎன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இரண்டாம்பாட்டில் “கவராகமுடித்து“ என்றபடியே மயிர் முடித்து வந்த்தில் ஈடுபடக் காணாமையாலு “களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல், மிளிரநின்று விளையாட“ என்றாற்போலே குழல்களைத் தோள்களிலே தாழவிட்டான், அதைக்கண்டு சொல்லுகிறாள் “சுற்றுங் குழல்தாழ“ என்று. (சுரிகையணைத்து) இடுப்பிலே (அழகுக் குடுலாகச்) சொருகும் கத்திக்குச் சுரிகை யென்று பெயர். வடசொல் விகாரம், அதை யணிந்துகொண்டு வந்தானாயிற்று. இங்கே வியாக்கியான வாக்கியங் காண்மின் “(சுரிகையணைத்து) உகப்பார்க்கும் உகவாதார்க்கும் கருவி ஒன்றாயிற்று, சத்ருக்களை இருதுண்டமாக விட்டுமுடிக்கும், அநுகூலரை அழகாலே கொல்லும்.“

(மற்றும் பல இத்யாதி) பலவகைப்பட்ட ரத்நபூஷணங்களையும் பொன்னாபரணங்களையும் சாத்திக்கொண்டு வந்தீர், காலங் கடந்து வந்தீராகையாலேஉள்ளே வரமாட்டாமையாலே முற்றத்தளவிலே நின்று புன்முறுவல் செய்து பார்ப்போம், இவள் அநுராகம் தோற்ற இருந்தாளாளகில் உள்ளே புகுவோம், ரோஷந்தோற்ற இருந்தாளகில் சற்று நிதானிப்போம்“ என்று கருதிப் புன்முறுவல் செய்து நிற்கிறீர்? எதுக்கு இவ்வளவு ப்ரயாஸப் படுகிறீர்? உம்முடையள திருவுள்ளத்துக்குப் பொருந்தினாரை விட்டிட்டு இங்கே வந்து ஏதுக்கு இத்தனை வருத்தப்படுகிறீர்?

 

English Translation

With curls of hair falling over your face, bracing a sword and wearing many gold-ornaments, you  enter the inner court and stand there smilling,-O what is this, what is this, what is this?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top