(1925)
நாமம் பலவு முடைநா ரணநம்பீ,
தாமத் துளவம் மிகநா றிடுகின்றீர்,
காம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர்,
ஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ.
பதவுரை
|
நாமம் பலவும் உடை |
– |
பல பல திருநாமங்களையுடைய |
|
நாரண நம்பி |
– |
ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே! |
|
மிக நாறு |
– |
மிகவுமு பரிமளித்துக்கொண்டிருக்கிற |
|
துளபம் தாமம் |
– |
திருத்துழாய்மாலையை |
|
இடுகின்றீர் |
– |
அணிந்துகொண்டிருப்பவரே! |
|
காமன் என |
– |
மன்மதன்போல |
|
பாடி வந்து |
– |
பாடிக்கொண்டுவந்து |
|
ஏமத்து |
– |
இராப்பொழுதில் |
|
இல்லம்புகுந்தீர் |
– |
வீட்டினுள் புகுந்தீர், |
|
இது என் இது என் இது என்? |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நாமம் பலவுமுடை“ என்பதற்கு * விச்வம் விஷ்ணுர் வஷட்கார, என்று தொடங்கி ஓதப்படுகிற ஸஹஸ்ர நாமங்களை யுடையவர் என்பதாக இங்குப் பொருளன்று, இங்குப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின், – “இன்னாளுக்கு அடியான் இன்னாளுக்கு அடியான் என்று நீர் படைத்த பேர்களுக்கு எல்லையுண்டோ? சொல்ல வேணுமோ? நீர் ஊர்ப் பொதுவல்லீரோ? நீர் நிரபேக்ஷரல்லீரோ? என்று.
தாமத்துளபம் மிகநாறிடுகின்றீர் – விரஹதாபம் பொறுக்கமாட்டாமல் நீர் இங்கு ஸம்ச்லேஷிக்க வருகிறீராகில் விரஹாக்நியாலே துளபமாலை கருகிப் போயிருக்கவேணுமே? இப்படி பரிமளிக்க ப்ரஸக்தியுண்டோ? என்பதாகக் கருத்துக் காண்க.
ஏமத்து இதுவென்? – ஏமம் என்று இரவுக்கும் பெயர், காவலுக்கும் பெயர், இரண்டு பொருளும் இங்குக் கொள்ளத் தகுவனவே. கட்டுங் காவலுமான இடத்திலே எதுக்கு வந்து சேர்ந்தீர், இரவிலே நீர்தேடிப் போகவேண்டிய இடம் வேறாயிருக்க இங்கு எதுக்கு வந்தீர்?
English Translation
O Garuda-banner-holder! O Deft rider! In your sleep you stretched a foot and smote a cart! In the dead of the night, you came singing love songs and enter this house. O, what is this, what is this, what is this?
