(1924)

(1924)

கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர்,

உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர்,

மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர்,

இருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ.

 

பதவுரை

கருளன்

கருடனாகிற

கொடி ஒன்று உடையீர்

ஒரு த்வஜத்தையுடையவரே!

தனி பாகீர்

அக்கருடனை நடத்துவதில் ஒப்பற்றவரே!

உறக்கில்

தூங்கும்போது

சகடம் அது

அஸுரனாவாவேசிக்கப் பட்ட) வண்டியானது

உருள

உருமாய்ந்துபோம்படி

நிமிர்த்தீர்

திருவடியைத்தூக்கினவரே!

இருளத்து

இவ்விராப்போதிலே

மருள

(பெண்கள்) மோஹிக்கும்படியாக

பாடிக்கொடு வந்து

இசைபாடிக் கொண்டு வந்து

இல்லம் புகுந்தீர்

வீட்டினுள் வந்து சேர்ந்தீர்,

இது என் இது என் இது என்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீர் மிகப் பெரியீர், பெரிய திருவடியைக் கொடியாக வுடையீர், அவனை ஏறி நடத்துவதில் அஸாதாரணமான வல்லமையுடையீர், உறங்கும்போது அஸுராவிஷ்டமான சகடம் மேலே விழ, பாலுக்கழுக்கிற பாவனையிலே நிமிர்ந்த திருவடியாலே அதனைப் பொடிப்படுத்தினீர், இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்தவுமக்கு நாங்கள் லக்ஷியமோ? இப்படி எங்களைக் குழைச்சரக்காக நினைத்து உபேக்ஷிக்கிற நீர் எங்களை நெஞ்சிலும் இட்டெண்ணாதேயிருந்துவிடலாகாதோ? பெண்பிறந்தா ரெல்லாரும் நஞசுண்டாரைப்போலே மோஹிக்கும்படியாகப் பண்ணை நுணுங்கிக்கொண்டு அபர ராத்ரியிலே இங்கு வந்து புகுந்தீரே, இது எதுக்கு? போம், போம் என்கிறாள். மருள – வினையெச்சம். கொடுபாடி – பாடிக்கொடு. கொடு – கொண்டு என்பதன் சிதைவு.

 

English Translation

O Lord Narayana with many names! You smell strongly of Tulasi fronds! Singing songs of Madana, god of love, you enter the house.  O, What is this, What is this, What is this?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top