(1921)
அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் தஞ்ச அருவரை போல,
மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய மைந்தனை மாக டல்சூழு,
கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க்கலி கன்றி
இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் கேது மிடரில் லையே.
பதவுரை
|
அன்னம் நடை |
– |
அன்னத்தின் நடைபோன்ற நடையையும் |
|
மடம் |
– |
மடமைக் குணத்தையுமுடையளான |
|
ஆய்ச்சி |
– |
யசோதைப்பிராட்டியானவள் |
|
வயிறு அடித்து அஞ்ச |
– |
வயிற்றிலே மோதிக்கொண்டு பயப்படும்படியாக |
|
அரு வரை போல்மன்னு |
– |
பெரிய மலைபோலப் பேராதே நின்ற |
|
கரு களிறு |
– |
(குவலயாபீட மென்கிற) கரிய யானையினுடைய |
|
ஆர் உயிர் |
– |
அருமையான உயிரை |
|
வவ்விய |
– |
கவர்ந்த |
|
மைந்தனை |
– |
மிடுக்கனான கண்ணபிரான் விஷயமாக, |
|
மா கடல் சூழ் |
– |
பெரிய கடலாலே சூழப்பட்டு |
|
கன்னி நல் மா மதிள் |
– |
ஸ்திரமாய் விலக்ஷணமான பெரிய திருமதிள்களை யுடைத்தான |
|
மங்கையர் |
– |
திருமங்கைநாட்டில் உள்ளவர்கட்கு |
|
காவலன் |
– |
பரிபாலகாய் |
|
காமரு சீர் |
– |
விரும்பத்தக்க திருக்குணங்களை யுடையரான |
|
கலிகன்றி |
– |
ஆழ்வார் (அருளிச்செய்த) |
|
இன் இசை மாலைகள் ஈர் ஏழும் |
– |
மதுரமான இசையை யுடைய சொல்மாலை யான இப்பதினான்கு பாசுரங்களையும் |
|
வல்லவர்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
|
இடர் ஏதும் இல்லை |
– |
துன்பமொன்றுமில்லை யாகும். |
English Translation
This garland of fourteen songs by the adorable kalikanri, king of Mangai tract with fortified walls by the sea, sing of the prince who killed the dark mountain-like rutted elephant while his swan-gaited cowherd-mother beat her stomach and feared for him. Those who master it will kbe free from despair
