(1919)
அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக் காண்மை யும்சே வகமும்,
உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக் குரைத்திலன் தானின் றுபோய்,
பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு பாய்ந்து புக்கு,ஆ யிரவாய்
நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.
பதவுரை
|
இப்பிள்ளைக்கு |
– |
இந்த பிள்ளைக்கு |
|
தினைத் தனை |
– |
கொஞ்சமேனும் |
|
அச்சம் இல்லை |
– |
பயமில்லை |
|
ஆண்மையும் சேவகமும் |
– |
சௌர்யமும் வீர்யமுமே யுள்ளது |
|
உச்சியில் முத்தி |
– |
உச்சிமோந்து |
|
வளர்ந்து எடுத்தேனுக்கு |
– |
வளர்த்தெடுத்தாயாகிய எனக்கும் |
|
தான் உரைத்திலன் |
– |
தான் சொல்லாதவனாய் |
|
இன்று போய் |
– |
இன்று வெளியிற்போய் |
|
பச்சிலை |
– |
பசுமையான இலைகளை யுடைத்தாய் |
|
பூ |
– |
பூத்திருக்கிற |
|
கடம்பு |
– |
கடப்பமரத்தின்மீது |
|
ஏறி |
– |
ஏறி |
|
விசை கொண்டு |
– |
வேகத்துடனே |
|
பொய்கையில் பாய்ந்து புக்கு |
– |
(காளியநாகங்கிடந்த) பொய்கையிலே குதி்த்து, |
|
ஆயிரம் வாய் |
– |
ஆயிரம்வாயாலும் |
|
நஞ்ச அழல் |
– |
விஷத்தைக் கக்குகின்ற |
|
நாகத்தினோடு |
– |
(அந்தக்காளிய) நாகத்தினோடு |
|
பிணங்கி |
– |
போர் செய்து |
|
நீ வந்தாய் போலும் |
– |
நீ வந்தாயாமே |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பச்சிலைப் பூங்கடம்பேறி – ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் காளியன் கிடந்த பொய்கையைப் பற்றிச் சொல்லுமிடத்து (5-7-4) விஷாக்நிநா ப்ரஸரதா தக்கதீரமஹீருஹம்“ என்றபடியே அக்கடப்பமரம் காளியனுடைய விஷாக்கியினால் கொளுத்தப்பட்டு இலை பூ காய் கனி முதலிய யொன்றுமின்றி மொட்டை மரமாக இருந்தாலும் கண்ணபிரான் அதன் மேலேறும்போது அவனுடைய திருவடி ஸம்பந்தமுண்டான மாத்திரத்தினால், * பச்சிலைப் பூங்கடம்பாயிற்று என்று ஆசாரியர்கள் நிர்வஹிக்கும்படி பசுமை இலை, பச்சிலை.
(ஆயிரவாய் நாகத்தினோடு) காளியனைச் சில விடங்களில் ஐந்தலை நாகமென்று சொல்லியிருக்க ஆயிரவாய் நாகமென்றதென்? எனில், பயங்கரத்வம் தோற்றதற்காகவா மத்தனை.
தினைத்தனை -தினையென்பது மிகச்சிறய தானியம், அதிக அற்பமான அளவுக்கு அதனை உவமை கூறுவர்கள் கவிகள், கிஞ்சித்தும் என்றபடி “தினையாஞசிறிதளவும்“ என்ற பெரிய திருவந்தாதியுங் காண்க.
English Translation
This child doesn;t have a wee bit of fear in him, only bold wrecklessness. I bring him up fondly, smelling his scalp. It looks like today you climbed up a Kadamba free, dived into the lakey and wrestled with the poison-spitting thousand-hooded snake!
