(1914)

(1914)

ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் றாயர் விழவெ டுப்ப,

பாசனம் நல்லன பண்டிக ளால்புகப் பெய்த அதனை யெல்லாம்,

போயிருந் தங்கொரு பூத வடிவுகொண் டுன்மக னின்று நங்காய்,

மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி வளைத்துண் டிருந்தான் போலும்.

பதவுரை

நங்காய்

அசோதாய்!
ஆயர்

இடையர்கள்
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கென்று

ஸஹஸ்ராக்ஷனான தேவேந்திரனுக்காக
விழவு எடுப்ப

ஆராதனை செய்வதற்கு
நல்லன பாசனம்

நல்ல பாத்திரங்களிலே
பண்டிகளால்

(பலபல) வண்டிகளாலே
புகப்பெய்த அதனை எல்லாம்

கொண்டுவந்து தள்ளப்பட்ட அந்த அன்னராசியை யடங்கலும்
இன்று

இன்றையதினம்
அங்கு

அவ்விடத்தில்
மாயன் உன் மகன்

மாயச்செய்கை வல்லவனான உன்பிள்ளை
போய் இருந்து

போயிருந்து
ஒரு பூதம் வடிவு கொண்டு

ஒரு பூதத்தின் வடிவைப் பூண்டு
அதனை எல்லாம் முற்ற

அவை முழுவதையும்
வளைத்து வாரி

(கைகளால்) வாரித்திரட்டி
உண்டிருந் தாண்டோலும்

உட்கொண்டானானாயிற்று

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் ‘அதனை யெல்லாம்’ என்பது இரண்டாமடியிலும் ஈற்றடியிலுமாக இரண்டு முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது, * அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிரவாவியும் நெய்யளறுமாகத் திரட்டின திரளிலே ஒரு சிறு அவிழும் மிச்சமாகாதபடி அடங்கலும் துற்றினானென்பதைக் காட்டுதற்கேயாயிற்று இவ்விரட்டிப்பு.

English Translation

O Lady Yasoda! From the days of yore, the cowherd talk celebrate a festival for the thousand-eyed indra bringing cartloads of good food-offering to the hill, If seems your wonderful son went there today and, assuming a ghoul form, gobbled up all of it in one sweep!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top