(1906)
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத் தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா
திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய் இருகூறு செய்த பெருமான் முனநாள்
வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு,
அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
பதவுரை
|
சுரிந்திட்ட சுருண்டிராநின்ற |
||
|
செம் கேழ் |
– |
சிவந்த நிறமுடையனவான |
|
உளை |
– |
பிடரி மயிர்களையுடைத்தாய்க் கொண்டு |
|
பொங்கு |
– |
களித்துவந்த |
|
அரிமா |
– |
குதிரைவடிவனான கேசியென்னுமசுரன் |
|
தொலைய |
– |
முடிந்து போம்படியாக |
|
பிரியாது |
– |
அதனைவிடாதே |
|
சென்று எய்தி |
– |
சென்று கிட்டி, |
|
எய்தாது இரிந்திட்டு இடம் கொண்டு அடங்காத அதன்வாய் |
– |
கிட்டவாராமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டு அவகாசங்கொடாதே அவிதேய மாய்க்கிடந்த அந்தக் குதிரையின் வாயை |
|
இரு கூறு செய்த |
– |
இருதுண்டமாக்கி யொழித்த |
|
பெருமான் |
– |
ஸ்வாமியாய் |
|
முனநாள் |
– |
(அன்றியும்) முன்பொரு காலத்திலே |
|
வரிந்திட்ட |
– |
கட்டுடைத்தான |
|
வில்லால் |
– |
வில்லாலே |
|
மரம் ஏழும் |
– |
மராமரங்களேழையும் |
|
எய்து |
– |
முறித்தவனாய், |
|
மலை போல் உருவம் |
– |
மலைபோன்றவடிவையுடையளான |
|
ஒரு இராக்கதி |
– |
சூர்ப்பணகையென்னும் ஒரு ராக்ஷஸியினுடைய |
|
மூக்கு |
– |
மூக்கை |
|
அரிந்திட்ட வன் காண்மின் |
– |
அறுத்தொழித்தவனான பெருமானன்றோ |
|
இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவன் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- குதிரை வடிவுகொண்டு நலிய வந்த கேசியைக் கொன்றும் மராமரமேழ் செற்றும் சூர்ப்பணகைக்கு அங்கபங்கஞ் செய்தும் தன் விறலை வெறியிட்டுக்கொண்ட பெருமான் கிடீர் இன்று வெண்ணெய்க்களவுக்காகக் கட்டுண்டு கிடக்கிறானென்கிறார்.
இராக்கதியின் மூக்கை யரிந்திட்டது முன்பும் மரமேழெய்த்து பின்பும் நடந்ததாயிருக்க, இங்கு க்ரம்மாறாட்டமாகச் சொல்லியிருப்பது பொருந்துமோவென்று சங்கிக்கவேண்டா, எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்களை அநுபவித்தல் மாத்திரமே இங்கு விவக்ஷிதம், அநுபூர்வியாகச் சரித்திரம் எழுதிக் கொண்டு போகிறார்களன்று.
English Translation
When the impetuous horse kesin with a red mane came rushing against him, the Lord confronted him and fore apart his jaws, getting rid of him forever. He also shot an arrow piercing even trees, and chopped off the nose of the mountain-like demoness surpanakha. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!
