(1898)

(1898)

எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? நரநா ரணனா யுலகத் தறநூல்

சிங்கா மைவிரித் தவனெம் பெருமான் அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும்,

பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது,

அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.

 

பதவுரை

நான் நாரணன் ஆய்

(சிஷ்யனும் ஆசார்யனுமாக) நாநாராயணரூபியாய்

உலகத்து

லோகத்திலே

அறம் நூல் சிங்காமை விரித்தவன்

அறநெறிகளைத் தெஜீவிக்கும் நூலாகியவேதம் சுருங்கிப் போகாதபடி அதை விஸ்தரிப்பித்தவனாயும்

எம்பெருமான்

எமக்கு ஸ்வாமியாயும்

அது அன்றியும்

அவ்வளவு மல்லாமல்

செம் சுடரும்

சந்திர ஸூர்யர்களும்

நிலனும்

பூமியும்

பொங்கு ஆர்

பொங்குதல் பொருந்திய ஸமுத்ரங்களும்

பொருப்பும்

மலைகளும்

நெருப்பும்

அக்நியும் (ஆகிய இவையடங்கலும்)

நெருக்கி

ஒன்றின்மேலோன்றாய்

புக அத்தனை போது

உள்ளே புகு மளவும்

பொன் மிடறு

திருவயிற்றை

அங்காந்தவன் காண்மின்

விவரித்துக்கொண்டிருந்தவனன்றோ

இன்று

இப்போது

அளை

தயிரையும்

வெண்ணெய்

வெண்ணெயையும்

உண்டு

(திருடி) உட்கொண்டு

ஆய்ச்சியால்

இடைச்சிகளால்

ஆப்புண்டிருந்தவன்

(தாம்பால்) கட்டுண்டிருக்கிறான்,

இது ஒப்பது ஓர் மாயம்

இதுபோன்ற ஆச்சரியம்

எங்கானும்

எங்கேனு மோரிடத்திலாவது

உண்டே

கண்டதுண்டோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தொடங்கும்போதே ‘எங்கானு மீதொப்பதோர் மாயமுண்டே’ என்ற அழகு என்னெ!, மேன்மையின் எல்லையிலே நிற்கிற பரபரன் நீர்மையின் எல்லையிலே நிற்கிறவிது என்ன ஆச்சரியம்! என்ன கபடச்செயல்!, இப்படிப் பட்ட மாயம் பகவத் விஷயத்தில் தவிர வேறு எந்த விஷயத்திலாவது காணக் கிடைக்குமோ? என்கிறார் நீர் கண்ட மேன்மையும் நீர் கண்ட நீர்மையும் என்கொல்? என்ன. முந்துறமுன்னம் மேன்மையை உப்பாதிக்கிறார் நரநாரணனாய் என்று தொடங்கி.

நரநாரணனாய் என்றதிலேயே ஒரு மாயமுண்டு, அதாவது – சீரிய சிங்காசனத்தில் வீற்றிருந்து ஆசார்யபதம் செலுத்த வேண்டியதான் தன்னை சிஷ்யனாக அமைத்துக் கொண்ட மாயம். அதுவும் ‘எங்கானு மீதொப்பதொர் மாயமுண்டே’ என்றதில் விவக்ஷிதமாகலாம்.

அளவெண்ணெய் என்பதை உம்மைத் தொகையாகக் கொண்டால் அளையையும் வெண்ணையையும் என்றதாகிறது. (அளை – தயிர்) இனி, வினைத்தொகையாகக் கொண்டால், அளையப்படுகிற வெண்ணெய் என்றதாகிறது. அளைதல் -துழாவுதல்.

 

English Translation

My Lord came as Nara-Narayana and divulged the sacred texts.  He is also the one who packed the twin Orbs, the Earth, the oceans, the mountains and the fires, -all within his stomach! And look, now he is a child leashed to a mortar for stealing the cowherd-dame;s butter! Can there ever be a greater wonder than this anywhere?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top