(1888)

(1888)

பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண,

ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு

ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும்

ஓங்கோத வண்ணனே! சப்பாணிஒளிமணி வண்ணனே சப்பாணி.

 

பதவுரை

பூ கோதை ஆய்ச்சி

புஷ்பங்களணிந்த மயிர்முடியை யுடையளான யசோதையினால்

கடை

கடையப்பட்ட

வெண்ணெய்

வெண்ணெயை

புக்கு உண்ண

(கள்ளத்தனமாய்ப்) புகுந்து அமுது செய்தவளவில்

அவள்

அந்த யசோதை

ஆங்கு

அவ்விடத்திலேயே

ஆர்த்து

(தாம்பினால்) கட்டி

புடைக்க

அடிக்க

புடை உண்டு

அடிபட்டு

ஏங்கி இருந்து

(சற்றுப்போது) அழுது கொண்டிருந்த (பிறகு)

சிணுங்கி

சீராட்டப்பெற்று

விளையாடும்

விளையாடுகின்ற

ஓங்கு ஓதம் வண்ணனே

தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனே!

சப்பாணி

சப்பாணி கொட்டவேணும்

ஒளி மணி வண்ணனே

ஒளிபொருந்திய மணி போன்ற நிறமுடையவனே!

சப்பாணி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யசோதைப்பிராட்டி பேசுகிற இப்பாசுரத்தில் ‘பூங்கோதையாய்ச்சி’ என்று வந்தது, தன்னையே படர்க்கையாகச் சொல்லிக்கொண்டபடி. பெரியாழ்வார் திருமொழியில் ‘சீதக்கடல்’ என்னுந் திருமொழியில் இப்படி அடிக்கடி வருதல் காண்க. அன்றியே, ஆழ்வார் யசோதை பேசும் பாசுரமாக அருளிச் செய்தாலும் தாமானதன்மையும் இடையிடையே தோற்றி, அதனால் யசோதையைப் படர்க்கையாகக் குறிக்கின்றார் என்னவுமாம்.

யசோதைப் பிராட்டி கடைந்த வெண்ணெயைக் கள்ளவழியால் வாரி விழுங்கினவளவிலே அவள் பிடித்துக்கொண்டு * கண்ணி நுண்சிறுத்தாம்பினால் கட்டிப் புடைக்க, அதனால் சிறிதுபோது வருந்திக்கிடந்து, பின்னையும் அவள் சீராட்ட அதனால் விளையாட்டிலே இழிகின்ற கடல்வண்ணனே! சப்பாணி கொட்டவேணும் என்று பிரார்த்திக்கிறது.

யசோதை தயிர் கடையும்போது தன் மயிர்முடியை மலர்களிட்டு அலங்கரித்துக்கொண்டே கடைவளாம், என்? கண்ணபிரானுக்கு அனுக்கம் உண்டாகாமைக்காக. அலங்காரங்கள் இன்றியே இடைச் சாதிக்குரிய ‘ஜல்லாரிபில்லாரி’ வேஷங்களுடனெ கிடந்தால் கண்ணன் அணுகுவதற்கு அஞ்சுவன் போலும். ஆகவே ‘பூங்கோதையாய்ச்சி’ என்ப்பட்டது.

சப்பாணி – ஸஹ, பாணி என்ற இரண்டு வடசொற்கள் சேர்ந்து சப்பாணியென விகாரப்பட்டு வந்த்தென்பர், ‘ஒருகையுடன் கூட’ என்று பொருள், இத்தொடர் மொழி -ஒருகையுடன் கூட மற்றொரு கையைச் சேர்த்துக் கொட்டுதலாகிய விளையாட்டைக் காட்டும்.

 

English Translation

O Lord dark as the deep ocean! You come and ate butter while the flower-cuoiffured Dame Yasoda sat and churned.  She bound you up and beat you, made yo    u weep, then consoied you, Now you are playing!  Clap Chappani! O Bright gem-hueld Lord! Clap chappani!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top