(1884)
தன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க
வன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி
நன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா
என்மக னே அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே.
பதவுரை
|
வல் பேய்ச்சி |
– |
கொடிய நெஞ்சுடையளான பூதனையானவன் |
|
தன் மகன் ஆக |
– |
(உன்னைத் தன்புத்திரன் போல அபிமானித்து |
|
தான் முலை உண்ண கொடுக்க |
– |
தான் தனது முலையை உன்வாயிலே மடுக்க, (அவ்வளவிலே) |
|
வல் மகன் ஆய் |
– |
வலிய ஆண்பிள்ளையாய் |
|
அவள் ஆவி வாங்கி |
– |
அவளுயிரைக் கவர்ந்து |
|
முலை உண்ட நம்பீ |
– |
அவளது முலையை உண்ட பிரானே! |
|
நல் மகள் ஆய்மகளோடு |
– |
சிறந்த மகளாகிய நப்பின்னைப் பிராட்டிக்கும் |
|
மணாளா |
– |
வல்லபனானவனே! |
|
என் மகனே |
– |
எனக்குப் பிள்ளையாக வாய்த்தவனே! |
|
அம்மம் உண்ணாய் |
||
|
என் அம்மம் |
– |
எனது ஸ்தந்யமாகிற |
|
சேமம் |
– |
க்ஷேமத்தளிகையை |
|
உண்ணாய் |
– |
உண்ணவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நானில மங்கை – நானிலம் – நான்காகிய நிலங்களையுடையதெனப் பூமிக்குக் காரணப்பெயர். நால்வகை நிலங்களாவன – முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. காடும் காடுசார்ந்த இடமும் முல்லையெனப்படும், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியெனப்படும், நாடும் நாடுசார்ந்த இடமும் மருதமெனப்படம், கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்த லெனப்படும். மற்றொன்றாகிய பாலை நிலம் பிராணி ஸஞ்சாரத்திற்கு உரியதன்றென்று இங்கு விலக்கப்பட்டது. அது நீரும் நிழலுமில்லாத கொடுநிலம். பாலைக்குத் தனியே நிலமில்லை யென்பதும் நால்வகை நிலங்களும் தத்தம் தன்மை கெட்டவிடத்தே பாலையா மென்பதும் சில ஆசிரியர்கொள்கை. இப்பாட்டில் நானில மென்றது ஸாமந்யமாகப் பூமியைச் சொல்லக்கடவது.
English Translation
When the terrible ogress came disguised as a mother and gave you her beasts. You took her poison milk, and her life with it. O Bridegroom of the good cowherd-dame Nappinnai, and of Dame Earth! My Child, take suck! Auspicious one, take suck!
