(1880)

(1880)

திருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு

தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,

உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,

மருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய்.

 

பதவுரை

திருவின் பொலிந்த

செல்வத்தினால் மிக்கவர்களாய்

எழில் ஆர்

வடிவழகும் நிறைந்தவர்களான

ஆயர்தம் பிள்ளைகளோடு

இடைப்பிள்ளைகளோடு கூட

தெருவில் திளைக்கின்ற

வீதியிலே விளையாடுகின்ற

நம்பீ

பிரானே!

செய்கின்ற

நீ செய்துவருகிற

தீமைகள்

தீம்புகளை

கண்டிட்டு

பார்த்து (அதனாலுண்டான உவப்பினால்)

என் கொங்கையின்

என்னுடைய முலையினின்

தீம் பால்

இனிய பாலமுது

உருகி

தானே உருகி

ஒட்டந்து

வெள்ளமிட்டு

பாய்ந்திடுகின்ற

பெருகிப் பாழாய்ப் போகின்றது (அப்படி பாழாய்ப் போகாமே)

குடங்கால்

(எனது) மடியிலே

மருவி இருந்து

பொருந்தியிருந்து

வாய்

வாயினால்

முலை உண்ண

முலைப்பாலுண்பதற்கு

நீ வாராய்

நீ வரவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவிற்பொலிந்த எழிலார் – தன்னுடைய அழகுக்கு ஏறக்குறையத் தகுதியான அழகுடைய பிள்ளைகள் என்றபடி. (தீமைகள் கண்டிட்டு உருகி) ஏற்கனவே ப்ரேமத்தாலே பெருகுகின்றபால், அதற்குமேலே நீ தீமை செய்யும்படிகளைக் கண்டு உள்ளுருகி வெள்ளமிடுகின்ற தென்றபடி. தீம் பால் -மதுரமானபால். ‘தீம்’ என்று இனிமை. (ஓட்டந்து) ஓட்டம் தந்து என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து விகாரப்பட்டு ‘ஓட்டந்து’ என்றாயிற்று, உடன்பாட்டு இறந்தகால வினை யெச்சம், ஓட்டம் தருதலாவது ஓடிவருதல், ப்ரவஹித்தலைச் சொன்னபடி.

 

English Translation

O Lord playing in the streets with beautiful cowherd boys! Seeing your naughty pranks. my breasts well with sweet milk, Overflowing come, sit on my lap and take suck with your auspicious lips

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top