(1866)

(1866)

புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின்

சரங்க ளேகொடி தாயடு கின்ற சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம்

இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா

குரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல் கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.

 

பதவுரை

ஓர் மாத்திரை போதில்

ஒரு கண்ணிமைப்பொழுதில்

புரங்கள் மூன்றும்

முப்புரங்களையும்

பொங்கு எரிக்கு

அக்நிஜ்வாலைக்கு

இரை கண்டவன்

இரையாக்கின ருத்ரனுடைய

அம்பில்

அம்புகளிற்காட்டிலும்

சரங்கன்

இந்த ராமபரணங்கள்

கொடிது ஆய்

கொடியவைகளாய்

அடுகின்ற

பொசிக்கின்றன

சாம்பவான்

ஸ்ரீஜாம்பவான்

உடன் நிற்க

புருஷகாரமாகக் கூடநிற்க

தொழுதோம்

வணங்குகின்றோம்

எந்தை பிரானே

எங்கள் நாயகனே!

இலங்கு வெம் கதிரோன்தான் சிறுவர்

விளங்குகின்ற ஸூர்யனுக்குப் புதல்வனாய்

குரங்குகட்கு அரசே

வாநரங்கட்குப் பிரபுவான ஸுக்ரீவனே!

எமக்கு நீ இரங்கு

எங்கள் விஷயத்திலே நீ இரங்கியருளவேணும்

எம்மை கொல்லேல்

எங்களைக் கொல்லா தொழியவேணும்

கூறினோம்

இந்தப் பிரார்த்தனையே அடுத்தடுத்துச் சொல்லுகின்றோம்,

தடம் பொங்கத்தம் பொங்கோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீஜாம்பவானைப் புருஷகாரமாகக் கொண்டு ஸுக்ரீவமஹாராஜரைச் சரணம் புகுகிறார்கள் அரக்கர். முப்புரங்களையும் ஒரு மாத்திரைப் பொழுதில் எரித்த சிவபிரானது பாணத்திற்காட்டிலம் ராமபாணங்கள் கொடியவையாயிருக்கையாலே மிக் அஞ்சுகின்றோம், ஆதித்யனுக்குப் புதல்வனான ஸுக்ரீவ மஹாராஜனே! நீர் குரங்குகட்கெல்லாம் அரசரதலால் அக்குரங்குகளெல்லாம் நீரிட்ட வழக்காயிருக்கக் கடவனவாகையாலே அவை எங்கள்மேற் பாயாதபடி திட்டஞ்செய்வீரென்று ஸ்ரீஜாம்பவானைப் புருஷகாரமாகக் கொண்டு உம்மைத் தொழுகின்றோம், எம்மைக் கொல்லாதபடி இரங்கியருளவேணும் என்கிறார்கள்.

 

English Translation

We dread the Rama-bana, -fire arrows of Rama that are hotter than Siva;s arrow which burnt the three cities within the twinkling of an eye. O son of the sun Sugriva, with Jambavan by your side! O king of the monkeys! Our Lord! Pray have mercy. Do not us!  We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top