(1860)
தண்ட காரணி யம்புகுந் தன்று தைய லைத்தக விலியெங் கோமான்
கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர் குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே
பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப் பேசு கின்றதென்? தாசர தீ,உன்
அண்ட வணர் உகப்ப தே செய்தாய்அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
பதவுரை
|
குலம் வேந்தே |
– |
(குற்றமற்றவர்களைத் தண்டியாத இக்ஷ்வாகுவின்) வம்சத்துக்குத் தலைவரே! |
|
தாசரதீ |
– |
ஸ்ரீராமபிரானே! |
|
தகவு இலி எம்கோமான் |
– |
ஈர்நெஞ்சு இல்லாதவனாய் எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணன் |
|
அன்று |
– |
(நீங்கள் வனத்திலே தாபஸராயிருந்த) அக்காலத்திலே |
|
தண்டகாரணியம் புகுந்து |
– |
தண்டகாரணியத்தில் பிரவேசித்து |
|
தையலை |
– |
அழகிற்சிறந்த பிராட்டியை |
|
கொண்டு போந்து |
– |
அபஹரித்து வந்து |
|
(அக்குற்றங்காரணமாக) |
||
|
எமக்கு |
– |
எங்களுக்கு |
|
ஓர் குற்றம் இல்லை |
– |
ஒரு குற்றமும் கிடையாது |
|
(ஆகையாலே) |
||
|
கொல்லேல் |
– |
(எங்களைக்) கொல்லா தொழியவேணும் |
|
பெண்டிரால் கெடும் |
– |
ஸ்த்ரீசாபல்யங் காரணமாகக் கெட்டுப்போகின்ற |
|
இக் குடி தன்னை |
– |
இந்த ராக்ஷஸஜாதியைப் பற்றி |
|
பேசுகின்றது என் |
– |
பேசலாவது என்ன இருக்கிறது? |
|
உன் அண்ட வாணர் |
– |
தேவரீருக்கு இஷ்டரான தேவதைகள் |
|
உகப்பதே |
– |
ஸந்தோஷிக்கக்கூடிய காரியத்தையே |
|
செய்தாய் |
– |
செய்தருளினீர், |
|
அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- குற்றமற்றாரை நலியகில்லாத இக்ஷ்வாகு வம்சத்திற்கு அணிவிளக்காக அவதரித்த பிரானே! எங்களிராவணன், தனக்கு ஒருவகையான அபராதமும் செய்யாத உம்மிடத்திலே தானே வீண்பகை கொண்டு நெடுந்தூரங் கடந்து தண்டகாரணியத்திலே புகுந்து சிறிதும் ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனாய் அழகிற்சிறந்த சானகியை அபஹரித்துக் கொண்டுவந்து சேர்ந்தான், இக்குற்றம் அவனொருவன் செய்த்தத்தனை யொழிய இதில் நாங்கள் கூட்டல்லோம். நாங்கள் அவனுடைய சேவகர்களாகையாலே அவன்கீழ்க் குடிவாழ்ந்த குற்றமொழிய ஸீதாபஹாரவிஷயத்தில் சிறிதும் நாங்கள் குற்றவாளிகளல்லாம். ஆகையாலே எங்களைக் கொல்லாதொழியவேணும். விஷயசாபல்யமே ஹேதுவாகக் கெட்டுப்போகின்ற இவ்விழிகுலத்தைப்பற்றி நாங்கள் என்ன சொல்லவல்லொம்! தேவரீருடைய அடியார்களான தேவர்கள் இராவணனால் நெருக்குண்டவர்களாதலால் அப்பாவி தொலைவது என்றே? என்று எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் மநோரதம் தலைக்கட்டிற்றாயிற்று. இவ்வளவே போதுமானது, இனி எங்களை ஒரு சரக்காக நினையா தொழியவேணும் என்று பிரார்த்திக்கிறார்களாயிற்று.
English Translation
O Tutelary king Darsarathi the day our Pitless king Ravana entered the Dandaka forest and brought sita, that very day he was doomed. We had no role in this, Pray do not kill us. Alas! this can is ruined by lust for women, what to speak of it! Your act is pleasing to the gods. We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!
