(1844)
கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை
நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து,இளந்
தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே.
பதவுரை
| கன்று கொண்டு |
– |
வத்ஸாஸுரனைக் கொண்டு |
| விளங்கனி |
– |
கபித்தாஸுரன் மீது |
| எறிந்து |
– |
வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும் |
| ஆநிரைக்கு அழிவு என்று |
– |
பசுக்கூட்டத்திற்குத் தீங்கு வந்ததேயென்றுபரிந்து |
| மா மழை |
– |
பெருமழையை |
| நின்று காத்து |
– |
நிலைநின்று தடுத்து |
| உகந்தான் |
– |
திருவுள்ளமுவந்தவனும் |
| நிலம் மா மகட்கு |
– |
பூமிப்பிராட்டிக்கு |
| இனியான் |
– |
போக்யனுமான எம்பெருமான் |
| இள தென்றல் |
– |
இளமைதங்கிய தென்றற்கொற்று |
| குன்றின் முல்லையின் வாசமும் |
– |
மலைமுல்லைப்பூக்களின் பரிமளத்தையும் |
| குளிர் மல்லிகை மணமும் |
– |
குளிர்ந்த கொடிமல்லிகையின் பரிமளத்தையும் |
| அளைந்து |
– |
முகந்துகொண்டு |
| வந்து உலவும் |
– |
வந்து (வீதிகளில்) உலாவப்பெற்ற |
| திருக்கோட்டியூரான் |
– |
திருக்கோட்டியூரிலுள்ளான் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முதலடியில் ‘அழிவென்று’ என்றபாடத்திற் காட்டிலும் ;அழவன்று; என்றபாடம் சிறக்கும், வியாக்கியானத்திற்கும் நன்கு பொருந்தும், “பசுக்களுக்கு அழிவு வருமன்று“ என்பது வியாக்கியான வாக்கியம். (அழிவன்று – கெடுதல் நேர்ந்த காலத்திலே).
English Translation
The sweet Lord of Dame Earth came in the yore as Krishna, swirled the Asuric calf against a wood-apple tree, then held a mountain against rains to protect the cows. He resides in Tirukkottiyur where the cool breeze blows over mountain Mullai and cool Jasmine flowers, wafting their fragrance everywhere
