(1835)
பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று,
காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே.
பதவுரை
| அன்று |
– |
முன்பொருகாலத்தில் |
| பார்த்தனுக்கு |
– |
அர்ஜுநன்பக்கலிலே |
| அருளி |
– |
அருள்கூர்ந்து |
| பாரத்தது |
– |
பாரதயுத்தத்திலே |
| ஒரு தேர் முன் நின்று |
– |
ஸாரதியாயிருந்து |
| காத்தவன் தன்னை |
– |
ரக்ஷித்தருளினவனும், |
| விண்ணோர் |
– |
நித்யஸூரிகள் அநுபவிக்கவுரிய |
| கரு மாணிக்கம் மா மலையை |
– |
கரிய பெரிய மாணிக்கமலை போன்றவடிவு படைத்தவனும் |
| தீர்த்தனை |
– |
பரமபவித்திரனும் |
| பூம்பொழில் சூழ் |
– |
திருமாலிருஞ்சோலையில் |
| நின்ற |
– |
நிற்பவனுமான |
| மூர்த்தியை |
– |
ஸ்வாமியை |
| கை தொழவும் என் மொய் குழற்கு முடியும் சொல் |
– |
ஸேவிப்பதற்கு அடர்ந்தகூந்தலை யுடையளான் என் மக்களுக்கு வாய்க்குமோ? |
English Translation
The Lord is the dark mountain gem of the celestials who drove the charriot for Arjuna in the great Bharata war in the yore. He is the sacred icon in Tirumalirumsolai amid flower groves. Will my well-coiffured girl at least be able to join her hands in worship today? I wonder!
