(1834)
புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,
கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,
தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ.
பதவுரை
|
புள்ளினை வாய் பிளந்து |
– |
பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனும் |
|
பொரு மா கரி கொம்பு ஒசித்து |
– |
போர்செய்ய முயன்றி (குவலயாபீடமென்னும்) மதகரியின் கொம்பை முறித்தவனும் |
|
கள்ளம் சகடு உதைத்த |
– |
திருட்டெண்ணங்கொண்ட சகடாஸுரனை (த் திருவடிகளால்) உழைத்தொழித்தவனும் |
|
கரு மாணிக்கம் மா மலையை |
– |
பெரியகரிய மாணிக்கமலை போன்ற வடிவையுடையவனும் |
|
தெள் அருளி கொழிக்கும் |
– |
தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற |
|
திருமாலிருஞ்சோலையில் |
||
|
நின்ற |
– |
நிற்பவனும் |
|
வள்ளலை |
– |
உதாரனுமான பெருமானை |
|
வாள் நுதலாள் |
– |
ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள் |
|
வணங்கி தொழ வல்லள் கொலோ |
– |
ஸேவிக்கப்பெறுவளோ? |
English Translation
The Lord is our dark mountain gem krishna who tore apart the beak of the Asura-bird Baka, then plucked the tusk of the rutted elephant kuvalayapida. He smote the bedevilled can with his foot. He is our benevolent one residing in Tirumalirumsolai. Will my bright-forehead-girl be able to worship him today? I wonder!
