(1825)

(1825)

புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் பொருகடல் அரவணைத் துயின்று,

பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனிமுகில் வண்ணர்தம் கோயில்,

கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள்வழிக் களிவண்டு பருக,

மதமிகு சாரல் மாலி ருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

 

பதவுரை

மடநெஞ்சே!-

புணரி

(திருப்பாற்கடலின்) அலைகளானவை

புதம் மிகு விசும்பில் சென்று அணவபொரு

மேகங்கள் நிறைந்த ஆகாசத்திலே சென்று உறாயும்படியாகக் கொந்தளிக்கிற

கடல்

திருப்பாற்கடலிலே

அரவு அணை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மீது

துயின்று

பள்ளிகொள்பவனாயிருந்து

(அதைவிட்டுக் திருவாய்ப்பாடியிலே வந்து பிறந்தருளி)

பதம் மிகு பரியின்

முயற்சிமிக்க (கேசியென்கிற) குதிரைவடிவான அசுரனுடைய

மிகு சினம்

மிக்க சீற்றத்தை

தவிர்த்த

போக்கினவரும்

பனி முகில் வண்ணர் தம்

குளிர்ந்த மேகம் போன்ற வடிவையுடையவருமான பெருமாளுடைய கோயில்

கதம் மிகு

மிகக் கோபத்தையுடைத்தாய்

சினத்த

(அதற்கு மூலமான) த்வேஷத்தையுடைத்தாய்

கடம்

மதங்கொண்ட

தட

பெரிய

களிற்றின்

யானையினுடைய

கவுள் வழி

கபோலத்தின் வழியே (பெருகாநின்ற)

களி

மதஜலத்தை

வண்டு

வண்டுகள்

பருக

பானம் பண்ணாநிற்கச் செய்தேயும்

மதம் மிகு சாரல்

மதநீர்பாய்ந்து வெள்ளமிடாநின்ற பக்கங்களை யுடைத்தான

மாலிருஞ்சோலை, வணங்குதும் வா

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- புதமிகுவிசும்பு -“அம்புதம்“ என்னும் வடசொல் மேகமென்னும் பொருளது, அச்சொல்லே இங்கு முதற்குறையாகப் புதம் என வந்துள்ளது. “கபோலம்“ என்னும் வடசொல் “கவுள்“ எனச் சிதைந்து கிடக்கிறது. (களிவண்டு பருக மதமிகுசாரல்) கடலில் ஒரு மூலையிலே கொசு இருந்து நீரைப் பருகினாலும் கடல் வற்றாதாப் போலே எத்தனை வண்டுகள் பானம் பண்ணினாலும் மதநீர் வற்றாதே பாய்ந்து வெள்ளமிடு மென்ப.

 

English Translation

O Frail Heart! The Lord reclines in the deep ocean where waves touch the clouds in the sky.  He then came as krishna and ripped the jaws of the impetuous white horse kesin.  He resides in Malirumsolai amid groves overflowing with the sweet ichor of rutted elephants that bees hover over and drink from their running cheeks.  Come, let us offer worship there

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top