(1824)

(1824)

தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி யுதிர தானுகந்

தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,

வானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து,

மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

 

பதவுரை

மடநெஞ்சே!-

தேனுகன்

தேநுகாஸுரனுடைய

ஆவி

பிராணன்

போய் உக

தொலைந்து போவதற்காக

அங்கு

அவ்விடத்தில்

ஓர் செழு திரள் பனங்களி உதிர

அழகாக்த் திரண்டிருந்த பனம்பழங்கள் உதிரும்படியாக

தான் எறிந்து உகந்த

அக்கழுதையைப் பனங்கனிமேலெறிந்து திருவுள்ளமுவந்த

தட கடல் வண்ணர்

கம்பீரமான கடல்போன்ற வடிவையுடையரான பெருமாள்

முன்

முன்பு

எண்ணி

இதுவே பாங்கான இடமென்று திருவுள்ளம்பற்றி

இடம் கொண்ட

இருப்பிடமாக ஸ்வீகரித்த கோயில்

மான்

மான்களானவை,

மரதகம் சாயல்

மரதகமணிபோன்ற ஒளியையுடையவையாய்

வானகம்

ஆகாசத்தளவும் ஓங்கினவைகளான

சோலை

சோலைகளிலிருக்கிற

மா மணிக்கல் அதர்

நீலப்பாறை வழிகளில் (புகுந்து)

நிறைந்து

நிறைய இருந்து

நுகர்

மேயப்பெற்ற

சாரல்

பக்கங்களையுடைத்தான

மாலிருஞ்சோலை, வணங்குதும் வா

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மரதகப் பச்சையின் நிறங்கொண்டு ஆகாசப் பரப்புடைய ஓங்கி யிருந்துள்ள சேலையினுள்ளில் நீலப்பாளை வழியே போய்ப்புக்கு மான்கள் தேனைப்பருகா நின்றுள்ளதாம் இத்திருமலை.

அதர் – வழி.

 

English Translation

O Frail Heart! The ocean-hued Lord came then as krishna, threw the Asura Dhenuka against a Palm tree, killin him instantly, Long ago he decided to reside in Malirumsolai, where deer frolic in the blue-gem  mountain paths amid emerald-green forests. Come, let us offer worship there

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top