(1817)

(1817)

மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை,

சிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன்

கறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார்

இறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே.

 

பதவுரை

மறை வலார்

வேதமல்லவர்கள்

குறைவு இலார்

குறைவொன்றுமில்லாதவர்களாய்க் கொண்டு

உறையும் ஊர்

நித்யவாஸம்பண்ணுமிட மான

வல்லவாழ்

திருவல்லவாழில் எழுந்தருளியிருக்கிற

அடிகள் தம்மை

ஸ்வாமிவிஷயமாக

சிறைகுலாவண்டு அறைசோலை சூழ்

சிறகையும் கொண்டாட்டத்தையுமுடைய வண்டுகள் ரீங்காரஞ் செய்யப்பெற்ற சோலைகளால் சூழப்பட்ட

கோலம்

அழகிய

நீள்

பெரிய

ஆலி நாடன்

திருவாலிநாட்டுக்குத் தலைவரும்

கறை உலாம்

ரத்தக்களைகழுவாத

வேல் வல்ல

வேற்படையை யுடையருமான

சலியன்

திருமங்கையாழ்வார்

வாய் ஒலி

திருவாயமலர்ந்த

இவை

இப்பத்துப் பாசுரங்களை

கற்று வல்லார்

ஓதியுணரவல்லவர்கள்

இறைவர் ஆய்

அரசர்களாயிருந்துகொண்டு

இரு நிலம்

விசாலமான இந்நிலத்தை

காவல் பூண்டு

ஆண்டு கொண்டு

நன்கு இன்பம் எய்துவரார்

பரமாநந்தமடையப்பெறுவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேதம் வல்ல அந்தணர்கள் ஒரு குறையுமின்றி * நித்யஸ்ரீர்நித்ய மங்களமாக வாழுமிடமான திருவல்லவாழென்னும் மலைநாட்டுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாகத் திருமங்யாழ்வார்ருளிச் செய்த இத்திருமொழியை ஓதி உணருமவர்கள் இவ்விபூதியிலுள்ளவரையில் தாங்களே தலைவராயிருந்து, இவ்வுடல் நீத்தபின் நித்யவிபூதியிலே புக்கு நித்யாநந்தம் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

வலார் – வல்லார். இலார் – இல்லார்.

கறையுலாவேல் – ஒய்வின்றி சத்ருநிரஸநம் பண்ணவேண்டுகையாலே ரக்தக்கறை கழுவ்வும் அவகாசமற்ற வேற்படை யென்க.

 

English Translation

This is a garland of songs on the Lord of Tiruvallaval worshipped by the perfect Vedic seers, by the sharp-spear-wielding Kaliyan, king of Alinadu surrounded by beautiful bee-humming graves. Those who master it will rule as kings on Earth and rejoice in heaven

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top