(1815)

(1815)

மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்  காலிவை மயங்கி நின்ற

அஞ்சு சேராக் கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல்,

சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் நாளும்

வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.

 

பதவுரை

நெஞ்சே

மஞ்சு சேர் வான்

மேகங்கள் சேர்ந்த ஆகாசம்

எரி

அக்நி

நீர்

ஜலம்

நிலம்

பூமி

கால்

காற்று ஆகிய

இவை

இப்பஞ்சபூதங்களும்

மயங்கி நின்ற

கூடிவர்த்திக்கிற

அஞ்சு சேர் ஆக்கையை

பாஞ்ச பௌதிகமான சரீரத்தை

அரணம் அன்று என்று

ரக்ஷகமல்லவென்று கொண்டு

உய்ய

உஜ்ஜீவித்துப் போக

கருதினால் ஏல்

நினைத்தாயாகில்

சந்து சேர்

சந்தனமணிந்த

மெல் முலை

மெல்லிய முலைகளையுடைய

பொஷ் மலர் பாவையும் தாமும்

பெரிய பிராட்டியாரும் தாமுமாக

நாளும்

எப்போதும்

வந்து சேர

கூடிவாழுமிடமான

வல்லவாழ் *** மருவு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘சந்தநம்’ என்னும் வடசொல் ‘சந்து’ எனச் சிதைந்து நின்றது.

 

English Translation

O Heart! This body is a fusion of the five elements, earth, fire, water, air and space.  If you realise that this is no fortress and seek a way out, then learn to speak of the glories of Tiruvallaval, abode of the Lord who resides with the Sandal-corsetted lotus-dame Lakshmi

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top