(1814)

(1814)

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா

பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,

தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற

மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.

 

பதவுரை

நெஞ்சே!

சோய் எலாம்

எல்லா நோய்களையும்

பெய்த்து

இட்டுப்பண்ணின

ஓர் ஆக்கையை

சரீரத்தை

மெய் என கொண்டு

மெய்யென்றே எண்ணிக்கொண்டு

பேயர்தாம்

அவிவேகிகள்

வாளா

வீணாக

பேசும் அப்பேச்சை

பேசுகிற பேச்சுக்களை

பிழை என நீ கருதினாய் எல்

பிசகென்று நீ நினைத்தாயாகில்,

தீ உலாம் வெம் கதிர்

ஜ்வாலையோடு கூடின உஷ்ண கிரணனான ஸூரியனாகவும்

திங்கள் ஆய்

சந்திரனாகவும்

மங்குல் வான் ஆகி நின்ற

மேக ஸஞ்சாரத்தையுடைய ஆகாசமாகவும் பரம்பி நிற்கின்ற

மாயனார்

ஆச்சர்யபூதனான பெருமானுடைய

வல்லவாழ் *** மருவு

 

English Translation

O Heart! Friends lead their lives considering this disease-ridden body as real.  If you find their arguments faulty, their lives futile, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the Lord who is the bright sun, the Moon, the sky and all else

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top