(1777)
இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல்
கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை
வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே.
பதவுரை
|
இலங்கு முத்தும் |
– |
விளங்குகின்ற முத்துக்களையும் |
|
பவளம் கொழுந்தும் |
– |
பவளத்துளிர்களையும் |
|
எழில் தாமரை |
– |
அழகிய தாமரைகளையு முடைத்தாய் |
|
புலங்கள் முற்றும் |
– |
உள்ள இடங்கள் முழுதும் |
|
பொழில் சூழ்ந்து |
– |
சோலைகளால் சூழப்பட்டதாய் |
|
அழகு ஆய |
– |
அழகியதான |
|
புல்லாணி மேல் |
– |
திருப்புல்லாணிவிஷமாக, |
|
கலங்கல் இல்வா புகழான் |
– |
கலக்கமற்ற கீர்த்தியையுடைய வரான |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச் செய்த |
|
மாலை |
– |
சொல்மாலையாகிய இத்திரு மொழியை |
|
வலங்கொள் தொண்டர்க்கு |
– |
அதிகரிக்கின்ற பாகவதர்களுக்கு |
|
இடம் ஆவது |
– |
இருப்பிடமாவது (எவ்விடமென்றால்) |
|
பாடு இல்லைகுந்தம் |
– |
ஒரு துன்பமுமில்லாத ஸ்ரீவைகுண்டமே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதில் ஆழ்வார் தமக்குக் ;கலங்கலில்லாப் புகழான்; என்று விசேஷணமிட்டுக் கொண்டதற்கு ஒரு கருத்துண்டு; ;உன் மனத்தாலென்னினைந்திருந்தாய்; என்று அவன் திருவுள்ளமானபடி செய்யப் பார்த்திருக்குமத்தனையன்றித் தன் தலையாலே ஒரு முயற்சி செய்து பெற நினைப்பது அவத்யம் என்று தெளிவுற்ற குடியிலே பிறந்த விவர் அத்தெளிவுக்கு மாறுபாடாக இத்திருமொழி வன்சொல்லாக அருளிச் செய்கிறாரே! இதுவென்? என்று சிலர் சங்கிக்கக்கூடும்; அதனால் இவருடைய ப்ராவண முண்டாயிற்றே!; என்று கொண்டாடும்படி யிருக்குமேயல்லது பழிக்கும்படி யிராது என்றவாறு.
English Translation
This is a garland of pure Tamil songs on the Lord of beautiful Pullani surrounded by heaps of bright pearls and corals, colourful lotus tanks and fragrant groves, by kaliyan of blemishless fame. Devotees who master it will find a place in Vaikunta of unmixed joy
