(1724)
வைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி,
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து,
செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும்,
கைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
பதவுரை
| வையம் எல்லாம் |
– |
உலகமெல்லாம் |
| உடன் வணங்க |
– |
ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க |
| வணங்கா |
– |
தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத |
| மன்னன் ஆய் |
– |
ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்) |
| தோன்றி |
– |
திருவவதரித்து |
| வெய்ய சீற்றம் |
– |
கடுமையான சீற்றத்தையுடையதும் |
| கடி |
– |
அரண்களையுடையதுமான |
| இலங்கை |
– |
இலங்காபுரியிலுள்ளவர்கள் |
| குடி கொண்டு ஓட |
– |
குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக |
| வெம் சமத்து |
– |
வெவ்விய போர்க்களத்தில் |
| வெம் போர் செய்த |
– |
கடுமையான யுத்தத்தை நடத்தின |
| நம் பரனை |
– |
எம்பெருமானை,- |
| செழு |
– |
அழகிய |
| தண் |
– |
குளிர்ந்த |
| கானல் |
– |
நெய்தல் நிலத்தையுடையதும் |
| மணம் நாறும் கைதை |
– |
பரிமளம்மிக்க தாழைகளை |
| வேலி |
– |
வேலியாகவுடையதுமான |
| கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்திலே |
|
அடியேன் கண்டுகொண்டேன்-.- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அநுகூலர்களோடு பிரதிகூலர்களோடு வாசியற எல்லாரும் இராமபிரானை வணங்கும்படி யிருக்குமேயன்றி, அப்பெருமான் வணங்குதற்குரிய பிறரொருவர் இலராதலால் “வையமெல்லா முடன்வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி” எனப்பட்டது. இவ்வவதாரத்தில் ‘??????????????????????????????????’ த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்” (இதுபிளவாகப் பிளந்து இருபக்கங்களிலும் இருதுண்டமாக விழுந்தாலும் விழுவனேயன்றி ஒருவர்காலில் தலைசாய விழமாட்டேன்) என்று வணங்காமுடி மன்னனாய் இறுமாந்திருந்தவன் இராவணனொருவனே போலும். அவனைக் குடும்பத்தோடு களைந்தொழித்தமை இரண்டரையடிகளிற் கூறப்பட்டது.
கைதை – ‘கேதகீ’ என்னும் வடசொல்லின் சிதைவு.
English Translation
Our Lord appeared as the unbowing monarch of all bowing humanity and angrily marched over the forfressed city of Lanka, putting the Rakshasa clan to flight, in a terrible battle that he fought. I know he is in kannapuram of fertile fields, where screwpine hedges grow profusly and spread fragrance everywhere.
