(1700)
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
பதவுரை
|
வல்லி இடையாள் பொருட்டாக |
– |
கொடிபோல் மெல்லிய இடையை யுடையளான ஸீதைக்காக, |
|
நீர் |
– |
கடலை அகழாகவுடையதாய் |
|
மதிள் |
– |
மதிள்களையுமுடைத்தான |
|
இலங்கையர் |
– |
லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு |
|
கோவை |
– |
தலைவனான இராவணனை |
|
அல்லல் செய்து |
– |
துன்பப்படுத்தி |
|
வெம் சமத்துள் |
– |
வெவ்விய போர்க்களத்திலே |
|
ஆற்றல் மிகுந்த |
– |
தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின |
|
ஆற்றலான் |
– |
மஹா வீரனும் |
|
வல் ஆள் அரக்கர் |
– |
வலிய ஆண்மைத்தனமுடைய ராக்ஷஸர்களின் |
|
குலம் |
– |
குலத்தில் தோன்றிய |
|
பாவை |
– |
தாடகை யென்னும் அரக்கியை |
|
வாட |
– |
முடிய (ச் செய்து) |
|
முனி தன் |
– |
விச்வாமித்ர முனியினுடைய |
|
வேள்வியை |
– |
யாகத்தை |
|
கல்வி சிலையால் |
– |
தான் கற்றுப் பயின்ற வில்லைக் கொண்டு |
|
காத்தான் |
– |
காத்தருளினவனுமான பெருமானுடைய |
|
ஊர், கண்ணபுரம், நாம் தொழுதும்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கல்விச்சிலையால் காத்தான் = ஸீதா விவாஹத்திற்குப் பிறகு பரசுராமனை வென்று கைப்பற்றிக்கொண்ட தன்னதான வில்லினால் விச்வாமித்ர யாகத்தைக் காத்தானல்லன்; பயிற்சிக்குப் பிடித்ததொரு வில்லைக்கொண்டு காத்தானத்தனை.
English Translation
For the sake of the creeper-like tender waisted Lady Sitamma; He did wield a bow and burn the city of Lakna with arrow to dust He did stand guard over sage’s Viswamitra sacrifice! He destroyed Rakshasi Tataka; -kannapuram, O, let us worship!
